Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Monday, 10 April 2017

குழந்தைகளின் பாலாரிஷ்ட தோஷம் நீங்க எளிய பரிகாரம் - சாய்பாபா உபாசகர் அருளியது


பாலாரிஷ்ட தோஷம் உள்ள குழந்தைகள் 12 வைத்து வரை எதாவது ஒரு  நோயினால் அவதி பட்டு கொண்டே இருப்பார்கள் . எப்பவும் எதாவது வியாதி வாட்டிகிட்டே இருக்கும் , அவர்கள் ஜாதகத்தில் 3 இடம் கெட்டு இருக்கும் ( அதாவது எட்டுக்கு எட்டாம் இடம் )

சிறுவயது முதல் இப்படி துன்ப படும் குழந்தைகளுக்கான எளிய பரிகாரம் 

ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டை எடுத்து நன்றாக சாம்பல் ஆகும் அளவிற்கு தீயில்  இட்டு அந்த சாம்பலுடன் , ஜவ்வாது , அத்தர் , புனுகு , அரகஜா , இதை குழைத்து , ஒரு சிறிய தாயத்தில் அடைத்து இத்தோடு கொஞ்சம்  தர்ப்பை புல்லையும் சேர்த்து தாயத்தில் அடைத்து , குழந்தையின் தொப்புளில் படுமாறு அரைஜாண் கயிற்றில் கட்டவிட ஓரிரு வாரங்களுக்குள் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும் . இது ஒரு அனுபவமும் கூட .

6 விஷயம் 
சாம்பலாக்கப்பட்ட2 பல் பூண்டு , ஜவ்வாது , அரகஜா , அத்தர் , புனுகு , தர்ப்பை புல் ( தர்ப்பை புல் தெய்வ பாதுகாப்பு கொடுக்கும்  )
இவையெல்லாம் பூஜை பொருட்கள் விற்கும் கடைகளிலே கிடைக்கும் மொத்தமாக 70 ரூபா தான் வரும் .

ஒரு சின்ன ஆலோசனை -- இவற்றை கடைகளில்  வாங்கி இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் வைத்து குழந்தையின் பேரில் ஒரு அர்ச்சனை செய்து பிறகு தயாரித்து குழந்தைக்கு கட்டிவிடலாம். எந்த ஒரு பரிகார செயலை செய்வதாக இருந்தாலும் விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காய் உடைத்து விளக்கேற்றி பின் பரிகார செயலை( எந்த செயலாக இருந்தாலும் )  செய்ய முழுவதுமாக வெற்றி கிடைக்கும் . இது என் 10 வருட ஆன்மீக தேடலில் கிடைத்த பெரிய அனுபவம் .

நேரம் கிடைத்தால் இந்த மகா ம்ருத்யுஞ்ஜய 21 அல்லது 48 அல்லது 108 தடவை தினமும் மந்திரத்தை சொல்லலாம்   

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்




பின் குறிப்பு 

இந்த தாயத்தை எந்த வயது உடையவர்கள் வேண்டுமானாலும்  கட்டி கொள்ளலாம் , அடிக்கடி விபத்துத்தில் மாட்டி கொள்கிறவர்கள் , உயிருக்கு ஆபத்து இருப்பவர்கள் , ஜாதகத்தில் மோசமான திசை , புத்தி நடப்பவர்கள் கட்டி கொள்ள ஒரு தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும் .

ஓம் சாய்ராம்           பைரவா சரணம் 

தகவல்: குருநாதர் சாய்பாபா உபாசகர் 

 ஸ்ரீ அமிர்த கடேஷ்வரர் திருக்கோவில் திருகடையூர்
 ஸ்ரீ அமிர்த கடேஷ்வரர் திருக்கோவில் திருகடையூர்