Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Sunday, 1 November 2015

வீட்டிற்குள் தெய்வ சக்தியை ஆகர்ஷிக்க / அழைக்க எளிய வழி

வீட்டிற்குள் தெய்வ சக்தியை ஆகர்ஷிக்க / அழைக்க எளிய வழி

குருநாதர் சாய்பாபா உபாசகர் சொன்ன ரகசியம்

தர்ப்பை புல்லும் , பச்சை கற்பூரமும்

1) வீட்டுக்கு வெளியே வீட்டோட  நான்கு பக்கத்துலயும் ரெண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதுல பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும்

வீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்

2)  தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சின்ன சின்ன துண்டா நறுக்கி அதை தூபம் போட வேண்டும் , அப்போ புகை கொஞ்சமா வரும் , அந்த புகையை வீடு முழுக்க பரவும் படி செய்ய வேண்டும்

தர்ப்பை புல்லுக்கும் , பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டுக்குள் அழைக்கற சக்தி உண்டு


ஓம் சாய் ராம்

Friday, 17 July 2015

ஸ்ரீ அகத்தியர் துதி




                                                  ஸ்ரீ அகத்தியர் துதி

கற்றைவார் சடையான் பெற்ற கற்றைவார் சடையன் நீயே ...!
நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே ...!
பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்
கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே ....!

வேந்தன்நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்
மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னநின் கடமை அன்றோ ...!
பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ
சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய் !

காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை
நாவாயும் புயலிற் சிக்கி தவித்தற்போல்  தவிக்கின்றேன் நான்
பேய்வாயினின்றும் மீட்ட பெருமானே - என்றும்
தாயாய் இருந்தே காப்பாய் ! தலைவைத்தேன் நினதுதாளே சரணம் !


ஓம் ஸ்ரீ அகஸ்த்தியாய நமோ நமஹ ..........!

Wednesday, 1 July 2015

குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ் - அனைவருக்கும்

குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ் - அனைவருக்கும்


குரு கிரக பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள  அழைப்பிதழ் - அனைவருக்கும்


அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் 
(குரு பரிகார ஸ்தலம் )
ஆலங்குடி 
 
 
VIDEO 


 


 
சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பாதிப்படையும்  ராசிகள்


ரிஷபம் , மிதுனம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனம்

மேற்கண்ட ராசி நண்பர்கள் தங்கள் ஜென்ம  ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் .

ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் லட்சார்ச்சனை விழா
09-07-2015 முதல் 15-07-2015 வரை
 நடைபெறுகிறது
பங்கேற்க கட்டணம் 400/-
அருள் மிகு குருபகவான்  உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினால் ஆன  டாலர் பிரசாதமாக வழங்கப்படும் / தபாலில் அனுப்பப்படும்
நேரில் பங்கு பெற முடியாத
தோஷ பரிகார செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பெயர் , நட்சத்திரம் , ராசி , கோத்திரம் , லக்னம்  போன்ற விபரங்களுடன்  MO / DD மூலமாக திரு கோவில் முகவரிக்கு அனுப்பி பிரசாதம் பெற்று கொள்ளலாம் .
DD எடுப்போர் 
 
உதவி ஆணையர் / செயல் அலுவலர் 
ASSISTANT COMMISSIONER /  EXECUTIVE OFFICER 


PAYABLE AT KUMBAKONAM 
என்ற பெயருக்கு DD  எடுத்து
 திருக்கோவில் முகவரி 
 உதவி ஆணையர் / செயல் அலுவலர்
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் , 
குரு பரிகார ஸ்தலம் ,
ஆலங்குடி ,
வலங்கைமான் வட்டம் ,
திருவாரூர் மாவட்டம் - 612801
என்ற முகவரிக்கு அனுப்பவும்


-------------------------------------------------------------------------------------------------------

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்
(குரு பரிகார ஸ்தலம் )
திட்டை
 
சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பாதிப்படையும்  ராசிகள்

ரிஷபம் , மிதுனம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனம்

மேற்கண்ட ராசி நண்பர்கள் தங்கள் ஜென்ம  ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் .
இப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு
லட்சார்ச்சனை

13-07-2015 முதல் 14-07-2015
 
காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் 
மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் 
லட்சார்ச்சனை நடைபெறுகிறது .
கட்டணம் RS 300 /-
சிறப்பு பரிகார ஹோமம் 

15-07-2015 முதல் 19-07-2015 வரை 
காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது .
கட்டணம் 500/-
லட்சார்ச்சனை  மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு பெரும் பக்தர்களுக்கு பூஜையில் வாய்த்த 2 கிராம் வெள்ளி  குரு பகவான் டாலர் பிரசாதமாக வழங்கப்படும் . 
நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் லட்சார்ச்சனைக்கு RS 300/-   பரிகார ஹோமத்திற்கு RS  500/- ஐ   
 நிர்வாக அதிகாரி 
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்  
திட்டை ,
தஞ்சாவூர் மாவட்டம் -613 003
என்ற முகவரிக்கு MO /DD  எடுத்து  தங்கள் பெயர் , நட்சத்திரம் , ராசி , லக்னம் , கோத்திரம் ஆகிய முழு விவரங்களையும் , தங்கள் முகவரியுடன் எழுதி அனுப்பி தபால் மூலம் பிரசாதம் பெற்று கொள்ளலாம் 
 
 
 
அனைவருக்கும் குருவருள் கிடைக்க வாழ்த்துக்கள்



 

Thursday, 30 April 2015

LIVE SHOW சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் குடமுழுக்கு விழா

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் குடமுழுக்கு விழா 

 தில்லை குடமுழுக்கு விழாவை நேரில் வந்து காணமுடியாதவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரமுடியாதவர்களுக்காக . live இதில் பார்க்கவும் . யாகசாலை பூசைகள் இதில் live telecast செய்கின்றனர் . பதிவுசெய்த காணொளிகளும் உள்ளன. அனைவரும் கண்டு நடேசன் அருள் பெறுவோம்

WEBSITE LINK

http://chidambarampickup.com/


Sunday, 22 March 2015

கொங்கணச் சித்தர் அருளிய - வாலைக் கும்மி






           வாலைக் கும்மி கொங்கணச் சித்தர்


http://www.mediafire.com/listen/hrs68hkjgpbamak/Konganar_Siddhar_Vaalai_Kummi.mp3

 

வெண்பா
 
கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்றசெல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசயநாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்சபாதம்வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.
 

விநாயகர் காப்பு

சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
உத்தமிமேற் கும்மிப் பாட்டுரைக்கவித்தைக் 

குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
சித்தி விநாயகன் காப்பாமே.

சரசுவதி துதி


சித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த
சக்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்தத்தமித் தோமென ஆடும் சரசுவதி
பத்தினி பொற்பதங் காப்பாமே.

சிவபெருமான் துதி


எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு
பங்கயப் பொற்பாதம் காப்பாமே.

சுப்பிரமணியர் துதி


ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்குமானைப் பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
மால்முரு கேசனும் காப்பாமே.

விஷ்ணு துதி


ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம்
ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.

நந்தீசர் துதி


அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
நந்தீசர் பொற்பதங் காப்பாமே.

நூல்கும்மி


தில்லையில் முல்லையி லெல்லையுளாடிய
வல்லவள் வாலைப்பெண் மீதினிலேசல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
தொல்லைவினை போக்கும் வாலைப்பெண்ணே!




மாதா பிதாகூட இல்லாம லேவெளி
மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று

பேதை பெண் ணாமுதல் 
வாலைப்பெண் ணாளென்று புகுந்தா ளிந்தப் புவியடக்கம்.

வேதமும் பூதமுண் டானது வும்வெளி
விஞ்ஞான சாத்திர மானதுவும்

நாதமுங் கீதமுண் டானதுவும் வழி
நான்சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே.

மூந்தச் செகங்களுண் டானது வும்முதல்
தெய்வமுந் தேவருண் டானதுவும்

விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான
விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே.

அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்தரிக்கும்

 முந்தின தஞ்செழுத்தாம் வாசி
பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்.

ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண்
ஐந்தெழுத் துமென்று பேரானாள்;

நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல
ஞான வகையிவள் தானானாள்.

ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்
ஓமென் றெழுத்தே யுயிராச்சு

ஆமிந் தெழுத்தை யறிந்துகொண்டு விளை
யாடிக் கும்மி யடியுங்கடி.

செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்

உகமு டிந்தது மஞ்செழுத்தாம் பின்னும்
உற்பன மானது மஞ்செழுத்தாம்.

சாத்திரம் பார்த்த்தாலுந் தானுமென்ன? வேதம்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?

சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்?

காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்

காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டுதியானஞ் செய்தால்.

ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி
வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே

வாயனு மைந்தாம் எழுத்துக்குள் ளேயிந்த
வாலையு மைந்தாம் எழுத்துக்குள்ளே.

அஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும்
ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு

நெஞ்செழுத் தாலே நிலையா மலந்த
நிசந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே!

ஏய்க்கு தேய்க்கு ஐந்செழுத் துவதை
எட்டிப் பிடித்துக்கொளிரண் டெழுத்தை

நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
நிலையைப் பாரடி வாலைப்பெண்ணே?

சிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச்
சீமையி லுள்ள பெரியோர்கள்

சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
தெய்வத்தை யல்லோ அறியவேணும்!

மனமு மதியு மில்லாவிடில் வழி
மாறுதல் சொல்லியேயென்ன செய்வாள் ?

மனமு றுதியும் வைக்கவேணும் பின்னும்
வாலைக் கிருபையுண் டாகவேணும்.

இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
தீமட்டு திந்தவரி விழிக்கே

கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி.

ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை
உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே

பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.


உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி

அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே!


எரியு தேஅறு வீட்டினி லேயதில்
எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை

தெரியுது போக வழியுமில்லை பாதை
சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே.

சிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடி

வலம்புரி யச்சங்கமூது மடி மேலே
வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே!

வாசிப் பழக்க மறியவே ணும்மற்றும்
மண்டல வீடுகள் கட்டவேணும்

நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே!


முச்சுடரான விளக்கி னுள்ளே மூல
மண்டல வாசி வழக்கத்திலேஎச்சுடராகி 

அந்தச் சுடர் வாலைஇவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே!

சூடாமல் வாலை இருக்கிறதும் பரி
சித்த சிவனுக்குள் ளானதனால்

வீடாமல் வாசி பழக்கத்தை பாருநாம்
மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே!


மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
விளக்கில் நின்றவன் வாணியடி

தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி
தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.

அத்தியி லேகரம் பத்தியி லேமனம்
புத்தியி லேநடு மத்தியிலேநெற்றி

 சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
நிலைமையைப் பாரடி வாலைப்பெண்ணே!

அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
வழுத்தி னேன்ஞானப் பழத்திலே

கழுத்தி லேமயேச் வரனு முண்டுகண்
கண்டு பாரடி வாலைப்பெண்ணே!

அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்
கொஞ்சி விளையாடும் வஞ்சியரே

நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன்
நேருட னாமடி வாலைப்பெண்ணே!

தொந்தியி லேநடு பந்தியிலே திடச்
சிந்தையி லேமுந்தி உன்றனுடன்

உந்தியில் விட்ணுவுந் தாமிருப் பாரிதை
உண்மையாய்ப் பாரடி வாலைப்பெண்ணே!

ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்
காலத்தி லேயனு கூலத்திலே

முலத்திலே பிரமன் தானிருந் துவாசி
முடிக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.

தேருமுண் டைஞ்சூறாம் ஆணியுண்டே அதில்
தேவரு முண்டுசங் கீதமுண்டே

ஆருண்டு பாரடி வாலைத்தெய் வம்மதிலே
அடக்கந் தானடி வாலைப்பெண்ணே!

ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்

அன்புடனே பரிகாரர்கள் ஆறு பேர்
அடக்கந் தானடி வாலைப்பெண்ணே!

இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்
இருக்கையில் புத்திக் கறிக்கையினால்

சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
சாகிற தேதடி வாலைப்பெண்ணே!

நகார திட்டிப்பே ஆனதனால் வீடு
வான வகார நயமாச்சு!

உகார முச்சி சிரசாச்சே இதை
உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே!

வகார மானதே ஓசையாச்சே அந்த
மகார மானது மாய்கையாச்சே

சிகார மானது மாய்கையாச்சே இதைத்
தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே!

ஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள்
ஊமை யெழுத்து மிருக்குதடி;

நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோ ம்வினை
நாடிப் பாரடி வாலைப்பெண்ணே!

கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்

எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காயம்
என்றைக் கிருக்குமோ வாலைப்பெண்ணே!

இருந்த மார்க்க்கமாய்த் தானிருந்து வாசி
ஏற்காம லேதான டக்கவேணும்திரிந்தே ஓடிய லைந்துவெந்து தேகம்
இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே!

பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
பூவில்லா பிஞ்சும் அநேகமுண்டு

மூத்த மகனாலே வாழ்வுண்டு மற்ற
மூன்று பேராலே அழிவுமுண்டு!

கற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற
கற்பை யளித்தவரே வாழ்க!

சிற்பர னைப் போற்றி கும்மியடி
தற்பரனைப் போற்றி கும்மியடி.

அஞ்சி னிலேரெண் டழிந்ததில் லையஞ்
சாறிலேயும் நாலொழிந்த தில்லை

பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
பேணிப் போடலாம் வாலைப்பெண்ணே!

கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டா னிரு
காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்

ஈயில்லாத் தேனெனத் துண்டுவிட் டானது
இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே!

மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய்
விளக்கு கன்னனூர்ப் பாதையிலே

காலூரு வம்பலம் விட்டத னாலது
கடுநடை யடி வாலைப்பெண்ணே!

தொண்டையுள் முக்கோணக் கோட்டையிலே இதில்
தொத்திக் கொடிமரம் நாட்டையிலே

சண்டை செய்துவந்தே ஓடிப்போனாள் கோட்டை
வெந்து தணலாச்சு வாலைப்பெண்ணே!

ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு
அப்போதே வெந்தே அழிந்திட்டதும்

பாச வலைவந்து மூடியதும் ஈசன்
பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே!

அன்ன மிருக்குது மண்டபத்தில் விளை
யாடித் திரிந்தே ஆண்புலியும்

 அங்கேஇன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை
எட்டிப் பிடிக்குமே மூன்று கிளியடி வாலைப்பெண்ணே.

தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
மாப்பிள்ளை தான்வந்து சாப்பிடவும்

ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து
விழிப்பது பாருங்கடி வாலைப்பெண்ணே.

மீனு மிருக்குது தூரணி யிலிதை
மேய்ந்து திரியுங் கலசாவல்

தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
தெவிட்டு தில்லையே வாலைப்பெண்ணே!

காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத
சாவி லிருக்குது தெம்பிலேதான்

பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
பார்த்தால் தெரியுமே வாலைப்பெண்ணே!

கும்பி குளத்திலே யம்பல மாமந்தக்
குளக்க ருவூரில் சேறுமெத்த

தெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து
சேர்ந்து ஆராய்ந்துபார் வாலைப்பெண்ணே!

பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு
கெண்டை யிருந்து பகட்டுதடி

கண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி
கழுகு கொன்றது பாருங்கடி!

ஆற்றிலே அஞ்சு முதலைய டியரும்
புற்றிலே ரண்டு கரடியடிகூற்றுனு 

மூன்று குருடன டிபாசங்
கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே!

முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
மோசம் பண்ணு தொருபறவை

வட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு
மானுந் தவிக்குது வாலைப்பெண்ணே!

அட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு
அம்புலி நிற்குது தேர் மேலேதிட்டமாய்

 வந்து அடிக்குதில் லைதேகம்
செந்தண லானதே வாலைப்பெண்ணே!

முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே

அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை
அமர்ந்தி ருக்கிறாள் வாலைப்பெண்ணே!


இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு
நாளா யிருந்தேஅமிழ்ந்து போகும்

கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை
காணவு மொட்டாள் நிலைக்கவொட்டாள்.

அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி
ஆரா தாரத்தை யுண்டுபண்ணிக்

கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை
கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.

காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகா லவிட முண்டவளாம்மாளாச்

 செகத்தைப் படைத்த வளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்.

மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்

ஆதரவாகிய தங்கையானாள் நமக்
காசைக் கொழுந்தியு மாமியானாள்.

சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை
செங்காட்டுச் செட்டியைத் தானுதைத்தாள்

ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள்
ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.

இப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த
ஈனா மலடி கொடுஞ்சூலிமைப்படுங் 

கண்ணியர் கேளுங்கடி அந்த
வயசு வாலை திரிசூலி.

கத்தி பெரிதோ உறைபெரிதோ விவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோ

சத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே!

அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
அப்படி வாலை பெரிதானால்

பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி.

மாமிச மானால் எலும்புண்டு சதை
வாங்கிஓடு கழன்று விடும்

ஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை
யாடிக் கும்மி அடியுங்கடி.

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதென்று

கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது
உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே!

மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
வாசமில் லாமலே பூவுமில்லை

பெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது
பேணிப் பாரடி வாலைப்பெண்ணே!

நந்த வனத்திலே சோதியுண்டு நிலம்
நத்திய பேருக்கு நெல்லுமுண்டுவிந்தையாய்

 வாலையைப் பூசிக்க முன்னாளில்
விட்ட குறைவேணும் வாலைப்பெண்ணே!


வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்
கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்

வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த
விதந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே!


வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்
காப்பது சேலைக்கு மேலுமில்லைபாலுக்கு 

மேலான பாக்கியமில்லை வாலைக்
கும்மிக் மேலான பாடலில்லை
.

நாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த
நாலாறு வாசல் கடக்கலாகும்பூட்டைக் 

கதவைத் திறக்கலா கும்மிது
பொய்யல்ல மெய்யடி வாலைப்பெண்ணே!

ஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை
ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்

ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம்
அற்றொரு வித்தாச்சு வாலைப்பெண்ணே!
 

இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
என்வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே

அன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை
ஆத்தாளைப் போற்றடி வாலைப்பெண்ணே!

வீணாசை கொண்டு திரியாதே இது
மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு

காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி
காணலாம் ஆகாயம் ஆளலாமே.

பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற
பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?

கொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை
கொடுத்த தாயும் நிசமாமோ?

தாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம்
தாமே இருவருந் தாங்கொடுத்தார்காயும்

 பழமுஞ் சரியாமோ உன்றன்
கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே!

பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற
பிள்ளை மசானக் கரையின் மட்டும்

தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து
சேர்ந்து பரகதி தான்கொடுக்கும்.

பாக்கியமும் மகள் போக்கியமும் ராச
போக்கியமும் வந்த தானாக்கால்

சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந்
திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.

திருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ்
சாகாத பேரி லொருவரென்றும்

அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை
அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே!

மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
மெல்லிய ரோடு சிரிக்கும்போது

யுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்
செத்த சவமடி வாலைப்பெண்ணே!

ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு
இருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்

நாளையென்று சொல்ல லாகாதே என்று
நான்மறை வேத முழங்குதடி.

பஞ்சை பனாதி யடியாதே அந்தப்
பாவந் தொலைய முடியாதே

தஞ்சமென்றோரைக் கெடுக்காதே யார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே.

கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதே

பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.

சிவன்ற னடியாரை வேதியரை சில
சீர்புல ஞானப் பெரியோரை

மவுன மாகவும் வையாதே அவர்
மனத்தை நோகவும் செய்யாதே.

வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு
மங்கையர் மேல்மனம் வையாதே

பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!

கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
கொளைக ளவுகள் செய்யாதே

ஆடிய பாம்பை யடியா தேயிது
அறிவு தானடி வாலைப்பெண்ணே!

காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளே

பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்
பழம்போ லுதிர்த்து விழுந்தானே.

காசார் கள்பகை செய்யா தேநடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதே

தேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
தேவடி யாள்தனம் பண்ணாதே!

தன்வீடி ருக்க அசல்வீடு போகாதே
தாயார் தகப்பனை வையாதே

உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
ஓடித் திரிகிறாய் வாலைப்பெண்ணே!

சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ ?

ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.

பாலோடு முண்டிடு பூனையு முண்டது
மேலாக காணவுங் காண்பதில்லை

மேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.

கோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக்
கூனிக் மூன்றுகா லென்றுசொன் னேன்

கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப்
பானைக்கு வாயில்லை யென்றுசொன்னேன்.

ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம்
பானைக்குப் பானைக்குநிற்கு மேல்சூல்மாட்டுக்கு \

காலில்லை யென்றுசொன்னேன் கதை
வகையைச் சொல்லடி வாலைப்பெண்ணே!

கோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக்
கூற்று மேகற் றிருந்தவனும்

வாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு
வகை தெரியுமோ வாலைப்பெண்ணே!

இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்

செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும்.

உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்

அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப்பெண்ணே!

பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு
பொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்

காரணகுரு அவனு மல்ல இவன்
காரியகுரு பொருள் பறிப்பான்.

எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப்
பூமியி லேமுழு ஞானியென்றே

உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே!

ஆதிவா லைபெரி தானா லும்மவள்
அக்காள் பெரிதோ? சிவன் பெரிதோநாதி

வா லைபெரி தானாலும் அவள்
நாயக னல்ல சிவம்பெரிது.

ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
அண்டாது மற்ற வியாதியெல்லாம் 

பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில்
பத்தினி வாலைப்பெண் பேரைச்சொன்னால்.


நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்த
நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்

சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை
உற்றகா லனையும் தானுதைப்பாள்.

பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி
னாங்கு புவனமும் மூர்த்திமுதல்

எல்லாந் தானாய்ப் படைத்தவளாம் வாலை
எள்ளுக்கு ளெண்ணைய்போல நின்றவளாம்.

தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மித் தமிழ்
செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்

நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
நீள்பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.

ஆறு படைப்புகள் வீடுகடை சூத்ர
அஞ்செழுத் துக்கும் வகையறிந்துகூறுமுயர்

 வல வேந்திரன் துரைவள்ளல்
கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி.

ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரு மந்த
அன்பான கொங்கணர் சொன்னதமிழ்பாடுங்கள்

 சித்தர்கள் எல்லோரும் வாலை
பாதத்தைப் போற்றிக் கொண்டாடுங்கடி.

சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி
தேவர்கள் வாழி, ரிஷிவாழி,பத்தர்கள் வாழி, பதம்வா ழிகுரு
பாரதி வாலைப்பெண் வாழியவே!




















Wednesday, 25 February 2015

அகத்தியர் பூஜை நேரடி ஒளிபரப்பு



அகத்தியர் பூஜை நேரடி ஒளிபரப்பு 
-----------------------------------------------


ஓம் அகஸ்திய மகரிஷி நமஹ!!!


அன்பான அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்.அய்யா திரு.சண்முகம் அவுடையப்பா(அகஸ்தியர்வனம்,மலேசியா)அவர்களின் இல்லத்தில் தவகோலத்தில் அமர்ந்திருக்கும் மகரிஷி அகத்தியருக்கு நடைபெறும் பூஜை,அபிஷேகம்,ஹோமம் மற்றும் இனிமையான பஜனை பாடல்களை  சித்தர்களின் கருணையால் நமக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள்..




நாள்: 15.01.2015
நேரம்:மலேசியா(7.00 pm )இந்தியா-(4.30pm)

மூன்று கட்டங்களாக நிகழ்ச்சி ஒளிபரப்பபடும்.
(முதலில் ஹோமம்-சிறிதுஇடைவெளி-அபிஷேகம்-இடைவெளி-பின்பு பஜனை.)

குறிப்பு:அய்யாவின் இல்லதில்லும் வாழ்விலும் அகஸ்திய பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் ,விரிவான தகவல்களுக்கு வலைமனையில் சென்று பார்க்கவும்.நன்றி.ஓம் அகஸ்திய மகரிஷி நமஹ!!!(http://agathiyarvanam.blogspot.com/2013/09/miracles.html)
 ( ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பிய தகவல் இந்த பதிவு )


Here is the tentative schedule of broadcast of the Siddahr Pooja from Agathiyar Vanam, Malaysia.

SCHEDULE (all times are Malaysian Standard Times +8 hours ahead of Greenwich)


1 January 2015 Thursday Guru Naal @ 6.00 pm
4 January 2015 Sunday Pornami Pooja @ 6.00 pm
8 January 2015 Thursday Agathiyar Jayanthi & Guru Pooja @ 10.00 am
15 January 2015 Thursday Guru Naal @ 7.00 pm
20 January 2015 Tuesday Amavasai Pooja @ 7.00 pm
22 January 2015 Thursday Guru Naal @ 7.00 pm
29 January 2015 Thursday Guru Naal @ 7.00 pm

3 February 2015 Tuesday Pormani Pooja @ 7.00 pm
5 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm
12 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm
17 February 2015 Tuesday Maha Sivarathri @ 6.00 pm, 9.00pm, 12.00 midnight, 3.00 am, & 6.00 am
18 February 2015 Wednesday Amavasai Pooja @ 7.00 pm
19 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm
26 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm

5 March 2015 Thursday Masi Magam Pornami @ 7.00 pm
12 March 2015 Thursday Guru Naal @ 7.00 pm
19 March 2015 Thursday Guru Naal @ 7.00 pm
20 March 2015 Friday Amavasai Pooja @ 7.00 pm
26 March 2015 Thursday Guru Naal @ 7.00 pm

2 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
4 April 2015 Saturday Panguni Uthiram Pornami Pooja @ 6.00 pm
9 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
16 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
18 April 2015 Saturday Amavasai Pooja @ 6.00 pm
23 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
30 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm

3 May 2015 Sunday Chitra Pornami Pooja @ 6.00 pm
7 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm
14 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm
17 May 2015 Sunday Amavasai Pooja @ 6.00 pm
21 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm
28 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm

2 June 2015 Tuesday Vaikasi Visagam Pornami Pooja @ 7.00 pm
4 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm
11 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm
16 June 2015 Tuesday Amavasai Pooja @ 7.00 pm
18 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm
25 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm

1 July 2015 Wednesday Pornami Pooja @ 7.00 pm
2 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
9 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
15 July 2015 Wednesday Amavasai Pooja @ 7.00 pm
16 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
23 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
30 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
31 July 2015 Friday Pornami Pooja @ 7.00 pm

6 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
13 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
14 August 2015 Friday Adi Mavasai Pooja @ 7.00 pm
20 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
27 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
28 August 2015 Friday Pornami Pooja @ 7.00 pm

3 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
10 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
12 September 2015 Saturday Amavasai Pooja @ 6.00 pm
17 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
24 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
27 September 2015 Sunday Pornami Pooja @ 6.00 pm

1 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
8 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
12 October 2015 Monday Mahalaya Amavasai Pooja @ 7.00 pm
15 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
22 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
27 October 2015 Tuesday Pornami Pooja @ 7.00 pm
29 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm

5 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm
11 November 2015 Wednesday Amavasai Pooja @ 7.00 pm
12 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm
19 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm
25 November 2015 Wednesday Pornami Pooja @ 7.00 pm
26 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm

3 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm
10 December 2015 Thursday Amavasai Pooja @ 7.00 pm
17 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm
24 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm
25 December 2015 Friday Pornami Pooja @ 6.00 pm
31 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm


 I shall try to stream live the puja conducted at Agathiyar Vanam every Thursdays, on Full Moon and New Moon days too. Please bookmark this page http://www.ustream.tv/channel/siddha-heartbeat and come check it out on these days. The puja usually starts at 7 pm Malaysian time, 8 hours east of Greenwich.

We shall be broadcasting in three portions, with a break in transmission in between each portion. We shall start with the Homam. There will be a break in transmission to give us time to clear up and prepare for the next stage, the Abhisegam. We shall take another break to clear up and prepare for the final stage, the Bhajans. So please stay with us. If it is necessary, please refresh the page after every break._shanAiya

பூசையின் பலன்

நிகண்டு நாடியில் இருந்து அகத்திய மா முனிவர் அருளிய ஆசி சுக்கமம் 
12.7.2010

உண்மையும் உத்தமமும் நிறைந்த பூசை
நிறைந்த இன்பம் தந்திடுமே மகத்துவப் பூசை
நிதானமானதொரு அற்புத பூசை
அறமுடனே அகிலம் காக்கும் பூசை 

அருளான மாந்தரோடு செய்வாய் நன்றாய்
நன்றன புண்ணியங்கள் காக்கும் பூசை
நற்கதியும் பலர் அடைய செய்யும் பூசை
எண்ணாத சக்தி எல்லாம் தந்திடும் பூசை 

எகாந்த நிலை அடைய வைக்கும் பூசை
வையகத்தின் மாந்தரின் அகத்தின் ஜோதி 

வலமாக்கும் முழுமதி பூசை அப்பா
ஐயத்தை நீக்கிடும் பூசைதானே 

ஆண்டவனை அடைய செய்யும் வழியும் இதுவே
வழி வகுக்கும் சேய்க்கும் மாந்தற்கும் தான்
வளத்திற்கும் அருளுக்கும் பொருளுக்கும்
அழியாத மார்கத்தில் இருந்த வண்ணம் 

அகிலத்தில் நிலை பெற்று வாழ் வழிக்கும் பூசை
பூசையால் புண்ணியங்கள் கிட்டும் பூசை
பூர்வமும் போக்கிடும் பூசை அப்பா
இசையுடனே குடும்பவளம் தந்திடும் பூசை
எவை எல்லாம் வேண்டினும் தந்திடும் பூசை
தந்திடுமே தர்மம் தவ சிந்தை
தரித்திரியம் போக்கும் பூசை யாகும்
அந்தமும் ஆதியும் இல்லா
அகிலமதில் உயர்வு தரும் பூசை அப்பா
அப்பனே ஆண்டவனே உருகும் பூசை
அறிவிழந்தோன் அறிவாளி ஆக்கும் பூசை
ஒப்பில்லா மகத்துவம் கொண்ட பூசை
உயர்வோடு நீ எடுத்து செய்வாய் அப்பா
ஒப்பில்லா மாற்றங்கள் மகத்துவமும்
உயர் நிலை பூசையாலே இருக்குதப்பா



Tuesday, 17 February 2015

வேதஸாரசிவ ஸ்தோத்திரம் .MP3





                         வேதஸாரசிவ ஸ்தோத்திரம் .MP3


http://www.mediafire.com/listen/wddau8iauidxug3/Vedasaara_SHIVA_STOTRAM.mp3
 
பசூனாம் பதிம் பாபநாசம் பரேசம்
கஜேந்த்ரஸ்ய க்ருத்திம் வஸாநம் வரேண்டம்!
ஜடாஜூடமத்யே ய்புரத் காங்கவாரிம்
மஹாதேவ மேகம் ஸ்மராமி ஸ்மராரிம் !!

பாபங்களைப் போக்கும் பரமேச்வரன் பசுபதியாய், கஜேந்திரனின் தோலை ஆடையாக அணிந்தும், ஜடையின் நடுவில் கங்கையைத் தாங்கியும் இருக்கிறார். அந்த மஹாதேவன் ஒருவரையே மனதில் ஸ்மரிக்கிறேன்.

மஹேசம் ஸுரேசம் ஸுராராதிநாசம்
விபும் விச்வதாம் விபூத்யங்கபூஷம் !
விரூபாக்ஷமிந்த்வர்க வஹ்நித்ரிநேத்ரம்
ஸதானந்தமீடே ப்ரபும் பஞ்சவக்த்ரம்!!

மஹேச்வரனுக்கும் தேவர்களுக்கு ஈசனும், அஸுரர்களை விரட்டி அடித்தவரும், விபுவாயும், உலகத்திற்கு நாதனும், விபூதியைப் பூசியவரும், சந்திர, சூர்ய, அக்னி ஆகிய முக்கண்களை உடையவரும், எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பவருமான ஐந்து முகத்துடைய பரமேச்வரனை ஸ்தோத்திரம் செய்கிறேன்.

கிரீசம் கணேசம் கலே நீலவர்ணம்
கவேந்த்ராதிரூடம் குணாதீதரூபம் !
பவம் பாஸ்வரம் பஸ்மனா பூஷிதாங்கம்
பவானீ கலத்ரம் பஜே பஞ்ச வக்த்ரம் !!

மலையில் வசிக்கும், கணங்களுக்குத் தலைவனும், நீலகண்டரும், ரிஷபத்தில் ஏறி வருபவரும், குணங்களைக் கண்ட உருவம் கொண்டவரும், விபூதி அணிந்து விளங்குபவரும் பார்வதியை மணந்தவரும், ஆகிய ஐந்து முகங்கள் கொண்ட பரமேச்வரனை ஸேவிக்கிறேன்.

சிவாகாந்த சம்போ சசாங்கார்தமௌலே
மஹேசான சூலின் ஜடாஜூடதாரின் !
த்வமேகோ ஜகத்வ்யாபகோ விச்வரூப:
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ பூர்ணரூப!!

பார்வதீமனாளனும், சந்திரப் பிறைகொண்டவரும், சூலம் ஏந்தியவரும், ஜடாபாரம் தாங்கியவரும் ஆன ஹே சம்போ!நீர் ஒருவரே உலகம் அளாவிய உலகேயானவர். நீர் முழுமையானவர். ஹே!ப்ரபோ அருளவேண்டும்.

பராத்மன மேகம் ஜகத் பீஜமாத்யம்
நிரீஹம் நிராகாரமோங்காரவேத்யம்
யதோ ஜாயதே பால்பதே யேந விச்வம்
தமீசம் பஜே லீயதேயத்ர விச்வம்!!

உலகத்தின் ஒரே முதற்காரணமான பரமாத்மா அவரே:பற்று அற்ற:வடிவம் கொள்ளாத:ஒங்காரப் பொருளாக இருப்பவர் அவரே. உலகம் தோன்றுவதும், இருப்பதும், லயிப்பதும் அவரிடமே, அந்த ஈசனை ஸேவிக்கிறேன்.

நபூமிர்நசாபோ நவஹ்நி:ந வாயு:
நசாகாசமாஸ்தே ந தந்த்ரா ந நித்ரா!
நசோஷ்ணம் ந சீதம் நதேசா நவேஷோ
ந யஸ்யாஸ்தி மூர்தி:த்ரிமூர்திம்தமீடே!!

ப்ருதிவி, அப், தேஜஸ், வாயு, ஆகாசமாகிய ஐந்து பூதங்களும் அவர் அல்ல. சோம்பலோ நித்ரையோ அவரல்ல, சூடு, குளிர், தேசம், வேஷம் என்பவையும் அவரல்ல. அவருக்கு வடிவவே இல்லை. பிரஹ்ம, விஷ்ணு, மஹேச்வரரூபியான அவரை ஸ்தோத்திரம் செய்கிறேன்.

அஜம் சாச்வதம் காரணம் காரணாநாம்
சிவம் கேவலம் பாஸகம் பாஸகாநாம்!
துரீயம் தம:பாரமாத்யந்தஹீணம்
ப்ரபத்யே பரம் பாவனம் த்வைதஹீநம்!!

பிறவியில்லாத எப்பொழுதும் விளங்கும் அவர் மற்றெல்லாகாரணங்களுக்கும் முதற்காரணமாணவர். சிவமே உருவானவர். ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவர். அஞ்ஞான இருளுக்கு அப்பாலே ஆதியந்தமில்லாத துரீயமாயுள்ளவர். இரண்டற்ற தூயதான பரம்பொருளாம் அவரை சரணடைகிறேன்.

நமஸ்தே நமஸ்தே விபோ விச்வமூர்தே
நமஸ்தே நமஸ்தே சிதானந்த மூர்தே !
நமஸ்தே நமஸ்தே தபோயோக கம்ய
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீதிஜ்ஞானகம்ய!!

உலகமே உருவான எங்கும் நிறைந்த உமக்கு நமஸ்காரம். ஞானம் ஆனந்தம் என்பனவற்றின் உருவான உமக்கு நமஸ்காரம். தவம் யோகம், வேத உணர்வு இவற்றின் மூலம் அடையத்தக்கவரான உமக்கு நமஸ்காரம்.

ப்ரபோ சூலபாணே விபோ விச்வ நாத
மஹாதேவ சம்போ மஹேச த்ரிநேத்ர !
சிவாகாந்த சாந்த ஸ்மராரே புராரே
த்வதன்யோ வரேண்யோ ந மான்யோ நகண்ய: !!

ப்ரபோ!விச்வநாத!மஹாதேவ, சம்போ!மஹேச!முக்கண்ணா!பார்வதீ மனாள!சாந்தரூப!மன்மதன், த்ரிபுரங்கள் ஆகியவற்றை தொலைத்தவரே!உம்மைத் தவிர சிறப்பு மிக்கவரும், போற்றத்தக்கவரும், எண்ணத்தக்கவரும் வேறு எவருமில்லை.

 சம்போ மஹேச கருணாமய சூலபாணே !
கௌரீபதே பதுபதே பசுபதே நாசின் !
காசீபதே கருணாயா ஜகதேதத் ஏக:
த்வம் ஹம்ஸி பாஸி விததாஸி மஹேச்வரோஸி !!

சம்போ. மஹேச்வர:கருணையுருவே. சூலபாணே. கௌரீபதே. பசுபதே, பசுபாசம் நீக்கிய காசீபதே. நீர் ஒருவரே இவ்வுலகைப் படைத்துக் காத்து பிறகு அழித்தும் வருகிறீர். அதனால் நீரே பெருங்கடவுள்.

த்வத்தோ ஜகத்பவதி தேவ பவ ஸ்மராரே !
த்வய்யேவ திஷ்டதி ஜகத் ம்ருட விச்வநாத !
த்வய்யேவ கச்சதிலயம் ஜகதேதத் ஈச
லிங்காத்மகே ஹர சராசர விச்வரூபின் !!

தேவனே!பவனே!மன்மதனே வென்றவனே!உம்மிடமிருந்தே இந்த உலகம் தோன்றியது. ஹேவிச்வநாத!உம்மிடமே நிலை பெறுகிறது இந்த உலகம். பின் உம்மிடமே லயமும் அடைகிறது. சராசரங்களின் வடிவினன் அன்றோ நீர்!



 

Sunday, 4 January 2015

திருவெம்பாவை.MP3



 திருவெம்பாவை.MP3

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.

திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.

சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.

பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.

திருச்சிற்றம்பலம்


பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் 
இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ 
பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி 
விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து 
நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். 
பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே!
 பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!



பாடல் 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
பொருள்:
 ""அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து 
பேசும் போது "ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் 
அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர 
மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். 
உறங்குபவள் எழுந்து, ""தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து 
விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்கு பதிலளித்த 
தோழியர்,""கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை 
வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ,
 நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் 
வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் 
தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து
 கொள்வாயாக, என்றனர்.

பாடல் 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில்,
நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் 
என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க 
அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். 
கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, ""ஏதோ தெரியாத்தனமாக 
தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச ÷வண்டுமா? இறைவனின் 
மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த 
விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப்
 பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.வந்த தோழியர் அவளிடம், 
""அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், 
தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் 
எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே 
அவசரப்படுத்துகிறோம், என்றனர்.


பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.

பொருள்:
 ""ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா 
உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், ""அதெல்லாம் 
இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும்
 வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர் களோ, ""அடியே! உன்னை 
எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் 
எண்ணவேண்டும். அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் ÷தவர்களின் 
மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம்
 உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? 
ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ
 எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் 
தூங்கு, என்று கேலி செய்தனர்.

பாடல் 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
பொருள்: ""நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் 
இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்ன
மாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத 
பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் 
அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள 
மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது.
 அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்"சிவசிவ என்று 
ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை  உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். 
முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் 
பெண்கள்.


பாடல் 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், 
"உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து 
உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் 
செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் 
விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர் களும் 
அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த
 எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் 
உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து 
நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

பாடல் 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்: தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் 
இந்த தூக்கமும் ஒன்றோ?தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும்,
மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான 
சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே "சிவசிவ என்பாயே! அப்படிப்பட்ட 
இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே 
போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி 
உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் 
போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.இதையெல்லாம் கேட்டும், இன்று உன்
உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக 
இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் 
எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒருபரிசாகக் கருதுகிறாயா?

பாடல் 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள்:
 தோழியை எழுப்ப வந்த பெண்கள், ""அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் 
கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் 
இசைக்கப்படுகின் றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் 
முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல்
பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும்
கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ
எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! 
இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள 
திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து 
சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே 
தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.



பாடல் 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
பொருள்:
கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் 
பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து 
இப்படித்தான் இருக்கும் இந்த உலகம்என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் 
புதுமையான சிவனே! உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு 
மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே
எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த 
பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை
மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற 
நிலையைப் பெறுவோம்.


பாடல் 10

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்:
 தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே 
சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் 
சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து 
கீழே இருக்கிறது. பல் வேறு மலர்களை அணியும் திருமுடியானது வான த்தின் 
எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை 
மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. 
வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் 
புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். 
ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் 
அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் 
அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!


 
 
 
பாடல் 11

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
பொருள்: சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் 
"முகேர் என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் 
திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழிவழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி 
வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு 
அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய 
கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை 
ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் 
அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த 
பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக!


பாடல் 12

ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

பொருள்: தோழியரே!
 இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் 
கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் 
அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற 
உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் 
கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் 
ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய 
பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, "சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி, அவனது 
பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.



பாடல் 13

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள்:
 கரிய நிற குவளை மலர்கள் குளத்தின்  நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த 
நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் 
மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். 
அவர்கள் "நமசிவாய என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக்
காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. 
தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் 
சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து 
நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பொருள்: ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்கநகைகள் 
ஆட, பெண் களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட
வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள்.
அவ்வாறு நீராடும் போது சிற்றம் பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள்.
வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும்
சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் 
மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் 
கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த 
இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் 
வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங் கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி 
நீராடுங்கள்.

பாடல் 15

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பொருள்: அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி "எம்பெருமானே 
என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் 
பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் 
கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் 
இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து 
எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் 
என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் 
ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். 
பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.



பாடல் 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

பொருள்: இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற 
மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன.
எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது.
எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி 
முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை 
ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, 
தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ 
விடாமல் பொழிவாயாக.

பாடல் 17

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

பொருள்: தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான 
நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் 
தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை
 போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய 
கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் 
சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த 
பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.



பாடல் 18

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

பொருள்: சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம்
எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும்,
தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், 
அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும், பூமியாகவும், 
இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் 
தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் 
மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.


பாடல் 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
பொருள்:
 "உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு 
தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது சொல்லும் பழமொழி 
இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க 
வேண்டும் என்று உன் னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத்
 தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு 
மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள்
அனுமதிப்பவர்களாய்  இருக்க வேண்டும். 
எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற 
தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ
 எங் களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித் தால் எங்களுக்கென்ன?


பாடல் 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பொருள்:
 சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். 
எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா
 உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம். எல்லா 
உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை 
பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற 
காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை
 பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை 
தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, 
உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.
 
திருச்சிற்றம்பலம் 
 

 source: dinamalar.com