SHIRDI LIVE DARSHAN

Thursday 11 April 2013

ஷிர்டி சாயிபாபா கோவில்

ஷிர்டி சாயிபாபா கோவில் 

ஷீரடி  சாய் பாபா  சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு 

LIVE TV காலை  4 மணி முதல் இரவு 11.15 வரை நேரடி ஒளிபரப்பு 

https://www.shrisaibabasansthan.org/darshanflash_1.html

Or

http://www.saibabaofindia.com/shirdi_sai_baba_live_online_samadhi_mandir_darshan.htm
( To view the live darshan use "IE" Internet explorer browser or Apple's Safari browser )

                           https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYFuHCrvpjECmFlpD3tLIctDUHxdaNaS2hm42IPaVzoQ-a6JWoRQvdM_AR_p0FmzIJ7aLMH359GsOYrDlkPhvx4J_BMxomNej30nTtFw5tXTVtzaptBD7HRWwiIqLbdaOpG2EWeUS-ntXz/s728/sai_gold_full.jpg

"பாபா.." இந்தப்பெயரை உச்சரிக்காத வட இந்தியர்கள்.. அதுவும் மராட்டிய மக்கள் இருக்க வாய்ப்பில்லை. 'பாபா..' என்ற சொல்லுக்கு, அப்பா.. தந்தை, தாத்தா இப்படி பல அர்த்தங்கள் இருக்கு. 'ஆயி.. பாபா..'ன்னுதான் இங்கே அம்மா அப்பாவை அழைக்கிறாங்க. மகான்களையும் அப்படியே அவங்க வயசை உத்தேசிச்சு, 'தந்தையே..' என்ற பொருள்பட 'பாபா..'ன்னு வடக்கர்கள் அழைக்க, நாமும் அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டோம். காலப்போக்கில் மகான்கள் என்றாலே பாபான்னு ஆகிடுச்சு.

'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இவரது பிறந்த தினம் 1838-ல் செப்டம்பர் மாசம் 28ஆம் தேதின்னு உத்தேசமா சொல்லப்படுது. தன்னோட பதினாறாம் வயசுல இவர் ஷிர்டிக்கு வந்திருக்கார். மூணு வருஷத்துக்கப்புறம் திடீர்ன்னு காணாமப்போயி ஒரு வருஷத்துக்கப்புறம் திரும்பவும் வந்து ஷிர்டியில் நிரந்தரமா தங்கிட்டார். அதாவது அவர் இறந்த, 1918ஆம் வருஷம் அக்டோபர் 15ஆம் தேதிவரையிலும் .

ஷிர்டிக்கு திரும்பி வந்தப்புறம், ஒரு வேப்பமரத்தடியை தன்னுடைய வசிப்பிடமா ஆக்கிக்கிட்டு, சில சமயங்களில் அங்கியே உக்காந்து தியானம் செய்ய ஆரம்பிச்சுடுவாராம். கொஞ்ச காலத்துக்கப்புறம் அங்கிருந்த மசூதியில் தங்க ஆரம்பிச்சுருக்கார். ரொம்ப எளிமையான வாழ்க்கைமுறையை கடைப்பிடிச்ச அவர், தன்னோட மற்றும் தன்னைச்சார்ந்தவர்களோட உணவுத்தேவைகளை யாசகம் கேட்டு பூர்த்தி செஞ்சுக்கிட்டிருந்திருக்கார். பசித்தீயை அணைக்கிறதுக்காக அவர் ஏத்தி வெச்ச 'துனி'ன்னு சொல்லப்படும் தீ இன்னும் எரிஞ்சுக்கிட்டிருக்குது. அந்த சாம்பல் பிரசாதமாவும் கொடுக்கப்படுதாம்.
( துனியிலிருந்து வரும் புகை..)

பாபா பார்க்கிறதுக்கு ரொம்ப எளிமையானவர். கஃபன் என்றழைக்கப்படும் உடம்பைச்சுற்றிய காவித்துணி, தலையை மூடியிருக்கும் இன்னொரு காவித்துணி இவ்வளவுதான் அவரோட சொத்து. இந்து முஸ்லிம் ஆகிய ரெண்டு மதங்களுக்கும் பொதுவானவர் இவர். இதுக்கு, இந்தக்கோயிலுக்கு வர்ற கூட்டமே சாட்சி. தான் தங்கியிருந்த மசூதிக்கு 'த்வாரகாமாயி'ன்னு பேர் சூட்டியிருக்கார். அதேசமயம் அந்த மசூதியில் ரெண்டு மத சம்பிரதாயங்களின்படியும் பூஜைகளும் நடக்குது. இறைவனே தலைவன், ஒருவனே தேவன் என்ற பொருள்படும் பாபாவின் திருவாய்ச்சொற்களான 'அல்லா மாலிக்'.., மற்றும் 'ஸப்கா மாலிக் ஏக் ஹை.' இங்கே ரொம்பவும் புகழ்வாய்ந்தது.

பாபா மசூதியில் தங்கியிருந்தப்ப, ஒவ்வொரு நாள் இடைவெளிவிட்டு இங்கேயிருக்கும் சாவடிக்கு தங்கறதுக்காக போவாராம். அதை நினைவுகூரும் விதமா, பால்கி எனப்படும் பல்லக்கு சேவை நடக்குது. பல்லக்கில் பாபாவின் உருவப்படத்தை வெச்சு, சமாதி மந்திரிலிருந்து த்வாரகாமாயிக்கு கொண்டுபோயிட்டு அங்கிருந்து சாவடிக்கு போவாங்க. அப்புறம் மறுபடி சமாதி மந்திருக்கு திரும்பிவந்து ஆரத்தி எடுப்பாங்க இதுக்கு ஷேஜ் ஆரத்தின்னு பேரு.
எங்கே எந்த சன்னிதி இருக்குன்னு இப்ப தெளிவா புரிஞ்சுபோச்சு..

கோயிலை இப்ப திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கியிருக்காங்க. முதல்ல போனப்ப, கேட்டெல்லாம் கிடையாது. இப்ப மொத்தம் நாலு நுழைவாசல்கள் இருக்குது. கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. அங்கியே ஒரு சின்னக்கவுண்டர் வெச்சு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சுக்கறாங்க. அளவுகளுக்கு தகுந்தாற்போல ஒன்னு ரெண்டா ஒரு சுருக்குப்பையில் போட்டு,  நீளமான சட்டத்துல அடிச்சிருக்கிற ஆணியில் தொங்கவிட்டுட்டு, நம்ம கிட்ட டோக்கன் தராங்க. நுழைவாசலில் ஆண்களுக்கு மட்டும் தடவல் சோதனை உண்டு.

லேண்டி பாக் பக்கத்துல இருக்கிற ரெண்டாம்கேட் வழியா நுழைஞ்சோம். 'பாக்& பகீச்சா'ன்னு சொன்னா தோட்டம்ன்னு அர்த்தம். இந்த லேண்டி பாக்கும், அதுல இருக்கிற கெணறும் பாபா தன் கையாலயும், ஊழியர்களின் உதவியாலயும் உருவாக்கினது. கெணத்தை வலைபோட்டு மூடிவெச்சிருக்காங்க. அங்கே ஒண்ணுசேர்ந்தாப்ல வளந்திருக்கும் வேப்ப+அரசமரத்து அடியில பாபா ஏத்திவெச்ச அகல் இப்பவும் எரிஞ்சுக்கிட்டிருக்காம், நம்மூர்ல அணையாவிளக்குன்னு சொல்றோமில்லையா, அதேமாதிரி இதை இங்கே நந்தாதீப்ன்னு சொல்றாங்க.

தரிசனத்துக்காக வரிசையில் நின்னு நுழைஞ்சோம். அதிகம் கூட்டமில்லை, படிகள் வழியா ஏறி, இறங்கி, யூ டர்ன் எடுத்துன்னு எப்படியோ, போயிக்கிட்டே இருக்கோம். ஒவ்வொருத்தர் கையிலும் காணிக்கையா கூடைகள். அதுல பூ, மாலைகள், சரிகைச்சால்வை, சாதாரண சால்வை, அப்புறம் பேடா பாக்கெட் இல்லைன்னா உலர்பழங்கள் இல்லைன்னா கடிஷக்கர்ன்னு இங்கே சொல்லப்படும் சீனி உருண்டைகள். இந்த சால்வைகளை பாபாவுக்கு சாத்திட்டு வீட்டுல பிரசாதமா வெச்சுப்பாங்களாம்.  கடைசியில் ஒருவழியா பாபாவுக்கு முன்னாடி வந்தே வந்துட்டோம் ஜஸ்ட் பத்து நிமிஷத்துல. நீளமான ஹால். அந்தக்கோடியில் தகதகன்னு மார்பிள் மேடையில் மினுங்கும் சிம்மாசனத்தில் பாபா.


பாபாவின் சமாதி இருக்கறதால சமாதி மந்திர்ன்னு அழைக்கப்படும் இந்த இடத்தில் முரளீதரன் அதாவது நம்ம குழலூதும் கண்ணனுக்கு கோயில் அமைக்கணும்ன்னு நாக்பூரைச்சேர்ந்த ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்ற பணக்காரர் ஏற்பாடு செஞ்சுருக்கார். சிலைகளும் ரெடியாகி வந்துட்டதாம். ஆனா, பாபா.. தானே முரளிதரனாக ரூபமெடுத்துக்காட்ட எல்லா தெய்வங்களும் ஒன்னுதான்னு தெளிஞ்ச கோபால்ராவ், அந்த இடத்தை பாபாவுக்கே கொடுத்துட்டாராம். சிலைகள் இப்போ கோயிலின் மியூசியத்தில் இருக்குன்னு கேள்வி.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6A6SXdG2ToeIhtcq01nDN4ntFcrSVlAQEkCyMlmqiwPigXs1AOVAwAoTWOItRlS6bmSITJDFVanYZ5WIR2YSg4NdEcF_WK-XQJgEz4qyT9lgSNBSW_LGLIw569xlclPf46y1N17fy-hc/s1600/baba_samatji.jpg

மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான தங்கக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம்.  இந்த சிலை திரு. பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டதுன்னு கூகிளார் சொல்றார். சமாதி மேடையின் முன்னால் அழகான தங்கத்தால்  வேயப்பட்ட ரெண்டு தூண்கள். அதுல இருக்கற எக்கச்சக்கமான வேலைப்பாடுகளை இன்னிக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம். பொதுவா பாபா இருக்கற அந்த இடம் முழுக்கவே தங்கத்தால் தகதகன்னு மின்னுது.

பக்தர்கள் கொண்டுவர்ற மாலைகளை பாபாவுக்கு போட்டுட்டு, ஏற்கனவே சாத்தியிருக்கற மாலைகளில் ஒன்னை உருவி பிரசாதமா தர்றாங்க. தடுப்புக்குள்ளாற மெதுவா நகர்ந்து முன்னாடி போய் நின்னதும், சும்மா அந்த முகத்தைப்பாத்துட்டே நின்னேன். ஒண்ணுமே நினைக்கவோ வேண்டிக்கவோ தோணலை.. அதான் நிஜம். திருப்பதி மாதிரி இங்கியும் ஜருகண்டி இருக்குது.. ஆனா, இன்னும் தள்ளிவிட ஆரம்பிக்கலை. சும்மா வாய் வார்த்தையாலயே, பஸ் கண்டக்டர் மாதிரி, 'ச்சலா.. ச்சலா... ப்பூடே ச்சலா..' அவ்ளோதான்.  தரிசனம் முடிச்சுட்டு திரும்பும்போது பாபாவை பார்த்தமாதிரிக்கே ரிவர்ஸில் நடக்கறாங்க சிலபேர். திருப்பதியிலும் இதை பாத்திருக்கேன்.

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQRC2SWhryDzaExxWCFt6CbMs4TE61wYe5pqS3gQMi4aC_bXHzIow


 
தரிசனம் முடிச்சுட்டு வெளியே வந்தப்ப லேசா இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. அதனால, ஓட்டமும் நடையுமா எல்லா சன்னிதிகளையும் வெளியில நின்னே கன்னத்துல போட்டுக்கிட்டோம். பாபா தங்கியிருந்த வேப்ப மரத்தடியிலும் ஒரு சிலைவெச்சு சின்னதா கோயில் கட்டியிருக்காங்க. அவர் வளர்த்த குதிரைக்கும் அங்கியே சமாதி இருக்குது. த்வாரகாமயியையும், மியூசியத்தையும் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. ம்யூசியமாவது ஏற்கனவே பார்த்ததுதான்.பாபாவின் வாழ்க்கை நிகழ்வுகளையும் அவருடைய ஆடைகளையும் பார்வைக்கு வெச்சிருக்காங்க. த்வாரகா மயியை அடுத்ததடவைக்கு ரிசர்வ் செஞ்சாச்சு. அவர் உபயோகப்படுத்தின பொருட்களெல்லாம் அங்க இருக்குதாம். இந்தக்கோயிலைப்பத்தின விவரங்கள் அனைத்தும் இங்கே இருக்குது. தேவையானதை க்ளிக் செஞ்சு தெரிஞ்சுக்கோங்க.

கோயிலுக்குள்ள சாயிபஜன் நடந்துட்டே இருக்குது. அது கோயில் முழுக்க ஒலிக்கிறமாதிரி அங்கங்க ஒலிபெருக்கிகள் வெச்சிருக்காங்க. புத்தக ஸ்டால் ஒண்ணும் பார்த்தேன். அனேகமா கோயில்களைப்பத்தினதாத்தான் இருக்கணும்.

நாலாவது கேட் கிட்ட இருந்த பிரசாத ஸ்டாலில் லட்டுபிரசாதம் வாங்கிட்டு, அங்கியே பக்கத்தில் இளநி குடிச்சுட்டு புறப்பட்டோம்
படங்கள் தந்துதவிய கூகிளாருக்கும், கூடவே வந்த உங்களுக்கும் நன்றி..

Posting From : http://amaithicchaaral.blogspot.com/

No comments:

Post a Comment