SHIRDI LIVE DARSHAN

Tuesday 31 July 2012

ஸ்ரீ கிருஷ்ணர் அஷ்டகம்.MP3

 http://www.fineartsbaroda.com/photos/Large/634560637260243008.jpg

ஸ்ரீ கிருஷ்ணர் அஷ்டகம்.MP3
              
                        


1. வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

2. அதஸீ புஷ்ப ஸங்காசம் ஹார நூபுர சோபிதம்
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

3. குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம்
விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

4. மந்தாரகந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம்
பர்ஹிபீஞ் சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

5. உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீலஜீமுத ஸந்நிபம்
யாதவானாம் சிரோத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

6. ருக்மிணீ கேளிஸம் யுக்தம் பீதாம்பர ஸுசோபிதம்
அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

7. கோபிகானாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷ ஸம்
ஸ்ரீ நிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

8, ஸ்ரீ வத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம்
சங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

9. க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராத ருத்தாய ய: படேத்
கோடி ஜன்மக்ருதம் பாபம் ஸ்மரணாத் தஸ்ய நச்யதி


http://www.allaboutindia.org/wp-content/uploads/2010/09/krishna-946833.jpeg

Sunday 29 July 2012

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க

http://www.mysixer.com/wp-content/uploads/2011/04/Rama-Sita-Lakshmana-Hanuman.jpg 
 
’ஸ்ரீ ராமம் ரகுதுலு திலகம் சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தசரம்’  அங்குல்யாபரண சோபிதம், சூடாமணி தர்ஸன கரம்
ஆங்சநேய மாஸ்ரயம், வைதேஹி மனோகரம்
வாகர சைன்ய ஸேவிதம், சர்வ மங்கள கார்யானு
கூலம் சத்தம் ஸ்ரீராமச்சந்திர பாலயமாம்
 
- இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிட்டும்.
 
http://farm3.staticflickr.com/2400/5817634683_295faed31c_z.jpg
 
 ‘ராம ராம ஹரே ராம்’ 
 
என்று தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தால் விஷ்ணு சகஸ்ர நாமம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிட்டும்.

நவ கிரகங்களால் ஏற்படும் தோஷம் நீங்கச் செய்யும் பதிகம்

 
http://3.bp.blogspot.com/-5Ut_p0ibsTw/TlfY54GozrI/AAAAAAAAEVE/YZUqqXk-nEs/s1600/navagrahas-nine-planets-in-hindu-astrology.jpg


வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
பாசறு கங்கை கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம் பிராண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
 
 
என்போடு கொம்போ டாமை இவைமார் பிலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்த மாலை புனல்குடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றோடு ஏழு பதினெட் டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்போடு நாள்கள் அவதாம்
அன்போடு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
 
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் களைய தூர்தி செயமாது பூமி
திசைதெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல
நல்ல அடியார் அவர்க்கு மிகவே
 
மதிநூதல் மங்கையோடு வடபால் இருந்து
மறைஒதும் எங்கள் பரமன்
நதியொடுபகொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
காதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடு நோய்கள் ஆனா பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
 
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிபகொன்றை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
 
வாள்வரி அதல தாடை வரிகோவணத்தார்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
 
செப்பில முலைநன் மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்போடு குளிரும் வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
 
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் குழிலங்கை அரயன் றனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
 
பலபல வேடமாகும் பரன் நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமாளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
 
கொத்தலர் குழலி யோடு விசயற்கு நல்கு
குணமாய வேடவிகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமனை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல
நல்ல அடியார் அவர்க்கு மிகவே
 
தேனமர்ப பொழில்கொள்ப ஆலைப விளை பசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே

மகாலட்சுமி சக்கரம்

 http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l2.jpg


சக்கர வழிபாடு மிக சக்தி வாய்ந்தது. எந்த சக்கர வழிபாடு செய்கிறோமோ அதற்குரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் செல்வம் சேர மகாலட்சுமி சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது.
மகாலட்சுமி சக்கரம்

பொருட் செல்வம் வர ஆரம்பித்து விட்டால் இதரச் செல்வங்களும் தானாகவே தேடி வரும் என்பதில் ஐயமில்லை. "ஸர்வ ஸம்பத் ஸம்ருத்யர்த்தம்'' என்ற மந்திரத்தைத் தினந்தோறும் இருபத்தையாயிரம் முறை ஆறு நாட்கள் உச்சரித்து வர வேண்டும். அதிகாலை வேளையில் காலைக் கடன்களை முடித்து விட்டுக் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

எத்ருஸா த்ராகீயஸ்யா தரதஸித-நீலோத்பல-ருசா
தலியாம்ஸம் தீ நம ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே
அநே நாயம் தந்யோ பவதி நசதே ஹாநி-ரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர''

இந்த மந்திரத்தை ஜெபித்து மகாலட்சுமியை வணங்கும்போது தேவிக்கு நிவேதனமாக தேன் அல்லது பாயசம் வைத்து வழிபட வேண்டும். தேவியின் கடைக்கண் பார்வைப் பட்டால் வாழ்வில் முன்னேற்றம் தானாக வரும்.
ஒருவருக்கு வாழ்வில் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றால் முனைப்புடன் செயல்படும் ஆற்றலும், தைரியமும், பக்கபலமும் வந்து விடும்.

இவ்விதம் வருவதற்கு மகாலட்சுமி சக்கரத்தை வைத்துப் பூஜை செய்து வர வேண்டும். செப்புத் தகட்டிலோ, வெள்ளித் தகட்டிலோ அல்லது பஞ்சலோகத் தகட்டிலோ இந்தச் சக்கரத்தைப் பதித்துப் பூஜையறையில் வைத்தும் வணங்கி வரலாம்.

வெள்ளியினால் செய்த தாயத்தினுள்ளோ, தங்கத்தினால் ஆன தாயத்தினுள்ளோ இந்தச் சக்கரம் பாதிக்கப்பட்ட தகட்டை அடைத்துக் கையில் கட்டிக் கொள்ளலாம். நிச்சயமாக நன்மைகள் பெருகவும், நலம் சேரவும் பக்கத் துணையாக விளங்கும்.

http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l1.jpg

Saturday 28 July 2012

சுதர்சன அஷ்டகம்.MP3



http://3.bp.blogspot.com/-NE4-aHBh7co/T7IbmdbZ0hI/AAAAAAAAo10/AHcs850zD90/s1600/SUDARSANAR2A.JPG

சுதர்சன அஷ்டகம்.MP3
 

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாதசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி


1.ப்ரதிபட ஸ்ரேணிபீஷண, வரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண
 

2. நிகில துஷ்கர்ம கர்ஸந, நிகமஸத் தர்மதர்ஸந
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
 

3. ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரகணத்ராஸகண்ட ந
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


 4. நிஜபத ப்ரீத ஸத்கண, நிருபதிஸ்பீத ஷட்குண
நிகமநிர்வ்யூடவைபவ, நிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரண, ஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


5.ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர, ப்ருதுதரஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ந விக்ரஹ, படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டித, பரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


6.புவநநேத்ர த்ரயீமய, ஸவந தேஜஸ் த்ரயீமய
நிரவதிஸ்வாதுசிந்மய, நிகிலஸூக்தே ஜகந்மய
அமிததவிஸ்வ க்ரியாமய, ஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந



7.மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர
ஷட ரசக்ர ப்ரதிஷ்டித, ஸகல தத்த்வ ப்ரதிஷ்டித
விவிதஸங்கல்ப கல்பக, விபுதஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


8.ப்ரதிமுகாலீட பந்துர, ப்ருதுமஹாஹேதி தந்துர
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்தி ர மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


9.தநுஜவிஸ்தார கர்த்தந, ஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தந, பஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம, ஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந


10.த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்
விஷமேபி மநோரத ப்ரதாவந்
ந விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:

    

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுணஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நம






ஸுத்ரஸநாஷ்டகம்  ஸ்தோத்ரத்தைச் சொல்பவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும். 

http://www.horaastrology.com/Uploads/yanthram/sudharsana.jpg   

http://www.dattapeetham.com/india/tours/2007/andhra2007/prodduturu/Sudarshana_Narasimha_Swamy.jpg
 http://ramanuja.org/sv/temples/srirangam/chakra-reduced-color.jpg
 

Thursday 26 July 2012

காகபுஜண்டர் ஜீவநாடி-ரமணி குருஜி



காகபுஜண்டர் ஜீவநாடி


காகபுஜண்டர் ஜீவநாடி

ஸ்ரீ காகபுஜண்டர் - ஸ்ரீ பஹூளா தேவி
ஜீவநாடியில் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குவது காகபுஜண்டர் ஜீவநாடி. இந்த நாடி மூலம் நாடி பார்த்துப் பலன்கள் கூறி வருபவர் ரமணி குருஜி. ‘சக்தி அருட்கூடம்’ என்ற பெயரில் இயங்கி வரும் இவரது ஆசிரமம் சென்னை தாம்பரம் அருகில் உள்ள சேலையூரில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.
நாடி பார்க்கும் முறை
இங்கு மற்ற நாடிகளைப் போல் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. விரல் ரேகை எடுக்கப்படுவதில்லை. பெயர் போன்ற விவரங்கள் கேட்கப்படுவதில்லை. அனைவரையும் உட்கார வைத்துப் பொதுவில் நாடி படிக்கப்படுகின்றது. பலன்கள் அனைத்தும் ஓலைச்சுவடியிலிருந்து பாடலாகவே படிக்கப்படுகின்றது. தினமும், மாலை நேரத்தில், ஏழு மணிக்கு மேல், இறை வழிபாட்டை முடித்து விட்டுப் பலன் கூறத் தொடங்குகிறார் ரமணி குருஜி.

ஸ்ரீ ரமணி குருஜி
குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ரமணி குருஜி இரவு ஏழு மணி அளவில் தமது இடத்தில் அமர்கின்றார். பின்னர் சோழிகளை எடுத்துக் குலுக்கிப் போடுகின்றார். அதில் விழுந்திருக்கும் சோழிகளின் தன்மைக்கேற்ப ஓலைக்கட்டிலிருந்து குறிப்பிட்ட ஓலையைத் தேர்ந்தெடுக்கின்றார். பின்னர் சுவடியைப் படிக்க ஆரம்பிக்கின்றார். அங்குள்ள ஒலிபெருக்கியில் அவர் அவற்றைப் பாடல்களாகப் பாடுகின்றார். அவை ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்யப்படுகின்றன. ஒலிபெருக்கியில் அவர் பாடல்களைப் பாடப் பாடத் தேவையானவர்கள் ஒலிப்பதிவுக் கருவி மூலம் அவற்றைப் பதிவு செய்து கொள்கின்றனர். ஏனெனில் அவர் பாடலுக்கு விளக்கம் எதுவும் கூறுவதில்லை. பதிவு செய்து வைத்து கொண்டு பின்னர் சந்தேகம் கேட்டால் ஆலோசனை வழங்குகிறார். பாடல்கள் அனைத்தும் பழங்கால வடிவில் விருத்தம் போன்று உள்ளது. நாடி பார்க்க வந்திருக்கும் நபர்களின் பெயர் போன்ற விவரங்கள் மற்ற நாடிகளைப் போல வெளிப்படையாக வருவதில்லை. ஆனால் தனிநபரின் பெயர்களும், வாழ்க்கைச் நிகழ்வுகளும், பாடல் வடிவில், யாருமே எளிதில் கேட்டு உடனே புரிந்து கொள்ளாத வண்ணம் பாடல்களாக வருகின்றன. குறிப்பாக உணர்த்தப்பெறும் இவற்றை நன்கு கவனித்துப் பொருள் கொள்ள வேண்டியது தேவையாகின்றது.
நாடி பார்க்க வந்து தம்மிடம் குறைகளைக் கூறுபவர்களுக்கு ரமணி குருஜி சோழிகளைக் குலுக்கிப் போட்டு பலன்கள் மற்றும் பரிகாரங்களைக் கூறிவருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன் இருக்கிறார்.
சித்தர்களில் சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர் காகபுஜண்டர். இவரது பெருமையினை ‘ஞான வாசிட்டம்’ என்னும் நூல் மூலம் அறியலாம். பெரிய காகத்தினைப் போன்ற உருவம் கொண்டவராதலால் அவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார் எனக்கூறுகின்றனர்.

ஸ்ரீ புஜண்ட மஹர்ஷி
ஒருமுறை, ரமணி குருஜி, 1962-ம் ஆண்டில் கங்கைக்கு நீராடச் சென்றிருக்கிறார். அங்கு ஒரு மகானால் ஆசிர்வதிக்கப்பெற்ற அவர், அம்மகானிடம் குரு உபதேசம் பெற்றிருக்கிறார். மேலும் அவரிடம் சோதிடக் கலையையும் பயின்றிருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர் அம்மகான் தம்மிடம் உள்ள ஓலைச்சுவடிகளை ரமணியிடம் தந்து ஆசிர்வதித்து, மக்கள் சேவை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படியே மக்களுக்குப் பல வழிகளிலும் இதுகாறும் உதவி வருகிறார் ரமணி. ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல வெளிநாட்டைச் சேர்ந்த அன்பர்களும் இவரது ஆன்மீகப் பணிக்கு உறுதுணையாக உள்ளனர்.
காகபுஜண்டருக்கென்று தனியாகக் கோயில் எழுப்பியுள்ள அவர் ஆண்டு தோறும், பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அதன் அருள் விழாவினைச் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார்.
ரமணி இதனை ஒரு சேவையாகத் தான் செய்து வருகின்றார். யாரிடமும் பணம் எதுவும் அவர் வாங்குவதில்லை. மேலும் அவர் சுவடியைப் படித்துப் பலன் கூறும் இடம் ஓர் ஆலயம் போல் விளங்குவதால், அங்கு செல்பவர்கள் மிகவும் சுத்தமாகச் செல்ல வேண்டியது அவசியம்.
ஆலய முகவரி:
Om Sakthi Arutkudam
18 Alamelupuram,
Selaiyur,
E. Tambaram,
Chennai 600 072
மேலும் விவரங்களுக்கு…
http://arulvanam.org/index.html

முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan


http://copiedpost.blogspot.ca/2012/12/live-dharshan.html

சுகர் ஜீவநாடி- ஸ்ரீ குமார் குருஜி







சுகர் ஜீவநாடி


சுகர் ஜீவநாடி

suka brhamam
சுகப் ப்ரம்ம மஹரிஷியைப் பற்றி பலரும் அறிந்திருக்கக் கூடும். கிளி போன்ற முகம் உடைய இம்மகரிஷி சதா ப்ரம்மத்தோடு ஒன்றிய நிலையில் இருந்ததால் சுக ப்ரம்ம மஹரிஷி என்று அழைக்கப்பட்டார். இவர் மஹாபாரதத்தை உலகுக்குத் தந்த வேத வியாசரின் புதல்வர். ”சுக முனிவர்” என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் அருளியதுதான் ”ஸ்ரீமத் பாகவதம்.” என்றும் பதினாறு வரம் பெற்ற மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது நேர் சீடர்தான் ஆதி சங்கரர். இதிலிருந்து சுக முனிவரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.
இவரது காயத்ரி மந்திரம்
ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!

மானுட குலம் உய்ய அவதரித்த இந்த மகான் இன்றும் மானுட சேவை செய்து வருகிறார் தமது ஜீவ நாடி மூலம். இந்நாடி மூலம் பலன்கள் கூறி வருகிறார் ஸ்ரீ குமார் குருஜி. இவரிடம் உள்ள நாடியின் பெயர் ”சுகர் மார்க்கண்டேய நாடி”  திரைப்பட மற்றும் நாடக நடிகர் எஸ்.வி. சேகர் உட்படப் பல புகழ் பெற்ற மனிதர்களுக்கு ஸ்ரீ சுக ப்ரம்ம மகரிஷிதான் குரு. ஆன்மீக வழிகாட்டி.

Moondravathu Kan - No Re-birth for actor S.V. Shekar

YOUTUBE VIDEO



ஸ்ரீகுமார்குருஜி

முகவரி 

New No 8/ Old No 22,
 Arulambal street, T Nagar.
Land mark:  (Kanada Sangh
school) Chennai - 600 017.
  Tel.:(044) 28342483


சுக முனிவர்
இந்த ஆசிரமம் மக்களுக்கு சோதிடப் பலன்களை மட்டுமல்லாது, தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி, ஏழை எளியோர்களுக்கு உதவி வருகிறது. மற்றும் பல்வேறு அறப்பணிகளையும், ஆன்மீக, ஆலயப் பணிகளையும் ‘சுகர் மார்க்கண்டேயன் அறக்கட்டளை’ என்ற பெயரில் செய்து வருகின்றது.
இங்கு மற்ற நாடிகளைப் போல விரல் ரேகை, பெயர் போன்ற விபரங்களைக் கொடுக்கத் தேவையில்லை. மாறாக இந்த இந்த இராசிக்குரியவர்கள், இன்னின்ன கிழமைகளில் வந்து சுவடி பார்க்கவேண்டும் என்று வரைமுறை உள்ளது. அம்முறைபடிச் சென்று நாடி பார்த்தால் அவரவர்களுக்குரிய பலா பலன்கள் தெரியவரும். பலன்களும் மிகத் துல்லியமாக இருப்பதாக நாடி பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
நாடி பார்க்கும் முறை
குறிப்பிட்ட கிழமையில் நாடி பார்க்க வருபவர்களிடம் முதலில் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. பின்னர் இறைவழிபாடு நடக்கிறது. அதன் பின்னர் ஸ்ரீ குமார் குருஜியால் நாடி வாசிக்கப்படுகின்றது. அது பாடல் வடிவில் அமைகின்றது. பின்னர் பலன்கள் கூறப்படுகின்றன. நாடி வருவோரிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படுவதில்லை. என்ன தேவையோ, என்ன சிக்கலோ அது பற்றி நாடியில் விரிவாகவும் விளக்கமாகவும் வருகின்றது. அதற்கான பரிகார முறைகளும் கூறப்படுகின்றன. அனைத்தும் சரியாகவே இருக்கின்றன.
ஸ்ரீ குமார் குருஜி இதனை ஒரு இறைப்பணியாகத் தான் செய்து வருகின்றார். இவருக்கு இந்த ஓலைச்சுவடிகள் இவருடைய குருவான ஸ்ரீ ஜெயகாந்தி நாயுடு மூலம் கிடைத்துள்ளன. ஜெயகாந்தி நாயுடு கடலூருக்கு அருகே உள்ள திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்ததான ‘தொட்டிப்பதி” என்னும் ஊரைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இயற்பெயர் ராமசாமி. இவருக்குப் பரம்பரைச் சொத்தாக உமாமகேசனார் ஏடுகளும், சுகர் மகரிஷி ஏடுகளும் கிடைத்தன. இறை அருளால் அவரும் மக்களுக்கு அதனை வாசித்து நல்வழி காட்டி வந்தார். பின்னர் ஸ்ரீ குமாரைத் தமது சீடராக ஏற்றுக் கொண்ட ஜெயகாந்தி நாயுடு, அவருக்கு ”ஸ்ரீ விஜயப் பிரம்ம ஸ்ரீகாந்தி” என்ற பட்டத்தைச் சூட்டினார். நாயுடுவின் மறைவுக்குப் பின் ஸ்ரீ குமார் குருஜி தமது குரு வழியில் இப்பணியைச் செவ்வனே செய்து வருகின்றார். தற்பொழுது தொட்டிப்பதி என்னும் சிற்றூரில் சுகர் மகரிஷி மற்றும் முருகனுக்குக் கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவிலும் இவர்கள் ஆசிரமத்திற்குக் கிளை உள்ளது.
ஸ்ரீ தன்வந்த்ரி விழா, சுகப்பிரம்ம மகரிஷி மகா ஜெயந்தி விழா போன்றவை ஆண்டு தோறும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவர்களது ஆஸ்ரமம் தி.நகரில் அமைந்துள்ளது.

நன்றி  ramanans.wordpress.com


முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan


http://copiedpost.blogspot.ca/2012/12/live-dharshan.html


சரபேஸ்வரர் அஷ்டகம்.MP3

http://i.ytimg.com/vi/bk-cDBzBLiE/0.jpg


சரபேஸ்வரர் அஷ்டகம்.MP3




நரசிம்மரின் உக்ரத்தை சாந்தம் செய்து இப்பூவுலகைக் காப்பாற்றிய கருணாமூர்த்தியான சரபேஸ்வரரை பிரம்மா துதிக்கிறார்.

1. ஸர்வேச ஸர்வாதிக விச்வமூர்த்தே
க்ருதாபராதான் அமரான் யதா ததான்யான்
விநீய விச்வர்த்தி விதாயினே தே
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய

2. தம்ஷ்ட்ரா நகோக்ர: சரபஸ்ஸ பக்ஷ:
சதுர்புஜச் சாஷ்டபத: ஸஹேதி:
கோடீர கங்கேந்து தரோ நிருஸிம்ஹ:
÷க்ஷõபா பஹோஸ்மத் ரிபுஹாஸ்து சம்பு:

3. ம்ருகாங்கலாங்கூல ஸுரஞ் ஸுபக்ஷ
தம்ஷ்டராநா ஷடாங்க்ரி பஜ ஸஹஸ்ர:
த்ரி நேத்ர காங்கேந்து ரவிப்ரபாட்ய:
பாயாத பாயாத் சரபேச்வரோந:

4. க்ஷúப்தம் ஜகத்யேன நிருஸிம்ஹ மூர்த்தே
தேஜோபி ராஸீத் கததாப மோஹ:
அபூத் பிரஸன்ன : ஸபவேத் க்ஷணேன
பாயாத பாயாத் சரபேச்வரோந:

5. ந்ருஸிம்ஹ மத்யுத்தத திவ்ய தேஜஸம்
ப்ரகாசிதம் தானவ பங்கதக்ஷம்
ப்ரசாந்தி மந்தம் விததாதி யோஸெள
அஸ்மான பாயாத் சரபேஸ்வரோஸவ்யாத்:

6. யோ பூத் ஸஹஸ்ராம்பு சதப்ரகாச:
ஸபக்ஷ ஸிம்ஹாக்ருதிரஷ்ட பாத:
ந்ருஸிம்ஹ வி÷க்ஷõப சமம் விதாதா
பாயாத பாயாத் சரபேஸ்வரோ ந:

7. யோ ப்ரம்ஹணோ வஜ்ரதரேண தேவை:
அன்யைரஸம் ப்ரேக்ஷ்ய மஹா மஹாத்மா
க்ஷணாத் ந்ருஸிம்ஹா தபயம் ததௌ ஸ
பாயாத பாயாத் சரபேச்வரோ ந:

8. த்வாம் மன்யுமாந்தம் ப்ரவதந்தி தேவா:
த்வாம் சாந்திமந்தம் முனயோ க்ருணந்தி
நீதோ நிருஸிம் ஹே: ப்ரசமம் த்வயாவை
ஸர்வாபராதம் சரப க்ஷமஸ்வ:

http://www.vanadurgamandir.org/images/god-images/4.-Sri-Atharva-Sarabeswarar.jpg

Wednesday 25 July 2012

ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம்.MP3



http://1.bp.blogspot.com/-7TVc0W4av4Q/TdOWX4-9dAI/AAAAAAAABHU/Gd77pVVjLDM/s1600/SRIRANGANATHAR.jpg

ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம்.MP3 




1. ஆநந்தரூபே நிஜபோதரூபே
ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே
சசாங்கரூபே ரமணீயரூபே
ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மநோ மே.
 
பொருள்: ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞான சொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும், அழகிய உருவமுடையவரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி செய்பவருமான அந்த ரங்கநாதரிடம் என் மனம் லயிக்கின்றது.

2. காவேரிதீரேகருணா விலோலே
மந்தாரமூலே த்ருதசார கேலே
தைத்யாந்த காலே அகிலலோகலீலே
ஸ்ரீரங்கலீலே ரவதாம் மநோமே.
 
பொருள்: காவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன் அருள்புரிபவரும், மந்தார மரத்தின் மேல் அமர்ந்தபடி புரியும் தனது அழகான லீலைகளால் மனத்தைக் கவர்பவரும் அசுரர்களின் அந்திம காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து அகில உலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகிய ஸ்ரீரங்கனுடைய லீலைகளின் பால் என் மனம் ஈடுபடுகின்றது.


 3. லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே
ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே
க்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே
ஸ்ரீரங்க வாஸே ரவதாம் மநோமே.
 
பொருள்: லட்சுமி தேவியின் இருப்பிடமாக உள்ளவரும் (திருமாலில் மார்பை விட்டு என்றும் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி) அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின் தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும், சூரிய மண்டலத்தில் ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும், காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலே வசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம் வசப்படுகிறது.

  4. ப்ரஹ்மாதி வந்த்யே ஜகதேக வந்த்யே
முகுந்த வந்த்யே ஸுரநாத வந்த்யே
வ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே
ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மநோமே.
 
பொருள்: பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுபவரும், உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும், முகுந்தனால் துதிக்கப்படுபவரும், தேவேந்திரனால் நமஸ்கரிக்கப்படுபவரும், வியாசர் மற்றும் சனகாதி முனிவர்களால் போற்றப்படுபவரும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என் மனம் விழைகின்றது.

5. ப்ரஹ்மாதிராஜே கருடாதி ராஜே
வைகுண்ட்ட ராஜே ஸுரராஜ ராஜே
த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே
ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மநோமே.
 
பொருள்: பிரம்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும், வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்று உலகங்களுக்கும் அரசனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் அதிபதியும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என் மனம் நாட்டமுடையதாகிறது.

6. அமோக முத்ரே பரிபூர்ண நித்ரே
ஸ்ரீ யோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே
ச்ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே
ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மநோமே.
 
பொருள்: உயர்வான அபய முத்திரையை <உடையவரும், முழுமையான நித்திரையையுடையவரும், யோக நித்திரையில் ஆழ்ந்தவரும் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவரும், அடைக்கலமடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்து அருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரே ஒருவருமான ஸ்ரீரங்க வாசரின் பால் என் மனம் எப்போதும் ஈர்க்கப்படுகிறது.

 7. ஸசித்ர சாயீ புஜகேந்த்ர சாயீ
நந்தாங்க சாயீ கமலாங்க சாயீ
க்ஷீராப்திசாயீ வடபத்ரசாயீ
 ஸ்ரீரங்கசாமீ ரமதாம் மநோமே.
 
பொருள்: ஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும், ஆதிசேஷன் மேல் பள்ளிக் கொண்டிருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்திருப்பவரும் ஆகிய ரங்கநாதரின் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது.

8. இதம்ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புநர் நாசங்கம் யதி சாங்க மேதி
பாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம்
யாநே விஹங்கம் சயனே புஜங்கம்
 
பொருள்: இது வல்லவா ஸ்ரீரங்கம்! இத்தலத்தில் மரணிப்பவர்கள் மறு பிறப்பால் அவதிப்படுவதில்லை. அப்படி மறு சரீரம் பெற்றால் (மறு பிறவியில் பிறந்தால்) கையில் சக்கரம், காலில் கங்கா ஜலம், பயணிக்கும் போது கருடன், சயனத்தில் சர்ப்பம் என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்யத்தையே அடைவர். (பகவான் தன்னோடு அவர்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவர்களும் அவரது வடிவையே பெறுவர் என்பது உட்பொருள்.)

9. ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய: படேத்
ஸர்வாந் காமா நவாப்நோதி ரங்கி ஸாயுஜ்ய மாப்நுயாத்.
 
பொருள்: எவரொருவர் இந்த ரங்கநாத அஷ்டகத்தை தினமும் காலையில் படிக்கிறாரோ அவரது நியாயமான எல்லா ஆசைகளும் நிறைவேறுவதோடு, ரங்கநாதரின் சாயுஜ்யத்தையும் அவர் பெறுவார் என்பது நிச்சயம்!

http://www.thehindu.com/multimedia/dynamic/01071/02may_tymbg02_sri__1071950e.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqKs72hkrDM69tWCckAcYA59ixlvk8ioIDh9PJJXsHc3EGVnSNbRk1fdqW7TWeLE8a_RGHet2KQ97pESN0Auix8mGPK0IaYUAKv49tPgYuvFmQYMzo0XsdO8UW8WUG-9wkLsHHK43tEmg/s640/srirangam+ranganathar.jpg


-------------------------------------------/ -----------------------------------------------------------------

http://tamil.oneindia.in/img/2012/01/05-vaikunta-ekadasi-300.jpg 


ஸ்ரீ ரங்கநாதர் ஸ்துதி.

ஸப்தப்ராகார மத்யே ஸரஸி ஜ முகுலோத் பாஸமாநே விமாநே
காவேரீ மத்யதேசே பணிபதிஸயநே சேஷபர்யங்க பாகே 
நித்ராமுத்ராபிராமம் கடிநிச்டஸிர: பார்கவ விந்யஸ்த ஹஸ்தம் 
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம்பஜேஹம்.


Sunday 22 July 2012

சரஸ்வதி அஷ்டகம்.MP3



http://tamil.webdunia.com/HPImages/miscellaneous_special07_saraswathipoojai/0710/19/740071019162658449.jpg

சரஸ்வதி அஷ்டகம்.MP3 

 


ஸதாநீக உவாச

மகாமதே மஹா ப்ராஜ்ஞ ஸர்வ
சாஸ்த்ர விசாரதா
அக்ஷீண கர்ம பந்தஸஸ்து புரு÷ஷா
த்விஜ ஸத்தம
மாணே யஜ்ஜ பேஜ்ஜப்யம்
யஞ்ச பாவ மனுஷ்மரண்
பரமபத மவாப் னோதி தன்மே
ப்ருஹீ மகாமுனே

சௌநக உவாச

இதமேவ மஹா ராஜா பிருஷ்டம்
வாம்ஸ்தே பிதாமஹ:
பீஷ்மம் தர்ம விதாம் ஸ்ரேஷ்டம்
தர்ம புத்ரோ யுதிஷ்டிர:

யுதிஷ்ட்ர உவாச

பிதாமஹ மகா பிராஜ்ஞ
ப்ருஹஸ்பதி சாஸ்திர விசாரதா
ப்ருஹஸ்பதி ஸ்துதா தேவி
வாகீசாய மகாத்மனே

ஆத்மானம் தர்ச யாமஸா
ஸூர்ய கோடி ஸமப்ரபாம்

ஸரஸ்வதி உவாச

வரம் விருணீஷ்வ பத்ரந்தே
யத்தே மனஸி வர்த்ததே

பிருஹஸ்பதி உவாச

யதிமே வரதா தேவி
திவ்ய ஜ்ஞானம் பிரயச்சமே

தேவி உவாச

ஹந்ததே நிர்மலம் ஞானம்
குமதி த்வம்ஸ காரம்
ஸ்தோதத் ரேணா நேந யே பக்தயா
மாம் ஸ்துவன் தி மநீஷிண:

பிருஹஸ்பதி உவாச

லபதே பரமம் ஜ்ஞானம்
யத் ஸுரைரபி துர்லபம்
பிராப்னோதி புரு÷ஷா நித்யம்
மஹா மாயா ப்ரஸாதத:

சரஸ்வதி உவாச

திரிஸந்நித்யம் பிரயதோ நித்யம்
படே அஷ்டக முத்தமம்
தஸ்ய கண்டே ஸதாவாஸம்
கரிஷ்யாமி நஸம்ஸய:
ப்ரஹ்ம ஸ்வரூபா பரமா
ஜ்யோதி ரூபா ஸநாதரீ
ஸர்வ வித்யாதி தேவி யா தஸ்யை
வாண்யை நமோ நம:

விஸர்க்க பிந்து மாத்ராஸு
யத்திஷ்டான மே வச
அதிஷ்டாத்ரீ ச யா தேவி
தஸ்யை நித்யை நமோ நம:
வ்யாக்யா ஸ்வரூபா ஸா தேவீ
வ்யாக்யா திஷ்டாத்ரு ரூபிணீ
ய யா விநா பிரஸங்க யாவாந்
ஸங்க்யரம் கர்த்தும் ந சக்யதே
கால ஸங்க்யா ஸ்வரூபாயா
தஸ்யை தேவ்யை நமோ நம:

ஸ்மிருதி சக்திர் ஞான சக்தி:
புத்தி சக்தி ஸ்வரூபிணி
பிரதிபா கல்பனா சக்தி யா ச
தஸ்யை நமோ நம:
க்ருபாம் குரு ஜகன் மாதா
மாமேவம் ஹத தேஜஸம்
ஞானம் தேஹி ஸ்மிருதிம் வித்யாம்
சக்திம் சிஷ்ய ப்ரபோதினிம்

யாஜ்ஞவல்க்ய க்ருதம் வாணீ
ஸ்தோத்திரம் ஏதத் துய: படேத்
ஸ கவீந்தரோ மஹா வாக மீ
பிருஹஸ்பதி ஸமோ பவேத்
ஸ பண்டித ஸ்ச மேதாவீ
ஸுகவ்நித்ரோ பவேத் த்ருவம்


http://3.bp.blogspot.com/_ADwJgwfepSw/Rw34pUJm6QI/AAAAAAAAAfM/rtmBalmBilM/s400/saraswathi.jpg

மூகாம்பிகை அஷ்டகம்.MP3



மூகாம்பிகை அஷ்டகம்.MP3
 

நமஸ்தே ஜகத்தாத்ரி ஸத் ப்ரஹ்மரூபே
நமஸ்தே ஹரோபேந்த்ர தாத்ராதி வந்த்யே
நமஸ்தே ப்ரபந்நேஷ்ட தானைகத÷க்ஷ
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி

விதி க்ருத்தி வாஸா ஹரிர் விச்வமேதத்
ஸ்ருஜத் யத்தி பாதீதி யத்தத் ப்ரஸித்தம்
க்ருபாலோகநாதே (அ)வதே சக்திரூபே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி

த்வயா மாயயா வ்யாப்த மேதத் ஸமஸ்தம்
த்ருதம் லீலயா தேவி குöக்ஷளஹி விச்வம்
ஸ்த்திதம் புத்தி ரூபேண ஸர்வத்ரஜந்தௌ
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி

யயாபக்தவர்கா ஹி லக்ஷ்யந்த ஏதே
த்வயா (அ) த்ரப்ரகாமம் க்ருபாபூர்ண த்ருஷ்ட்யா
அதோகீயஸே தேவி லஷ்மீரிதித்வம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி

புனர்வாக் படுத்வாதிஹீனாஹிமூகா
நனரஸ்தைர்நிகாமம் கலுப்ரார்த்யஸே யத்
நிஜஸ்யாப்த யேதச் ச மூகாம்பிகாத்வம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி

யதத்வைத ரூபாத் பரப்ரஹ்மணஸ்த்வம்
ஸமுத்தாபுனைர் விச்வலீலோத்யமஸ்தா
ததாஹூர் ஜனாஸ்த்வாம் ச கௌரீ குமாரீ
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி

ஹரீசாதிதேஹோத்ததேஜோ மயப்ர
ஸ்புரச் சக்ர ராஜாக்ய லிங்கஸ்வரூபே
மஹாயோகி கோலாக்ஷிஹ்ருத் பத்மகேஹே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி

நம சங்க சக்ராபயா பீஷ்ட ஹஸ்தே
நமஸ்தே (அ)ம்பிகே கௌரி பத்மாஸனஸ்த்தே
நம ஸ்வர்ண வர்ணே ப்ரஸன்னே சரண்யே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி

இதம் ஸ்தோத்ரரத்னம்க்ருதம் ஸர்வதேவைர்
ஹ்ருதித்வாம் ஸமாதாய லக்ஷ்ம்யாஷ்டகம்
ய: படேந்நித்யமேவ வ்ரஜ யாகலக்ஷ்மீம்
ஸ வித்யாம் ச ஸத்யம் பவத்யா ப்ரஸாதாத்


http://1.bp.blogspot.com/-BnRjqhtRvKc/T2SO75FGiGI/AAAAAAAAnSc/RY4yxnDyslk/s1600/MOOKAAMBIGAI+PNT+B.jpg

விஷ்ணு அஷ்டகம் . MP3

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiuhRFmjrEAH9for1NOGXUzDXPzWZBTNshAIpkSeCGzhsq3P90vlZLubZ7CzIBhfoV7hi1-kj-KQyhyOtci82ZaFET53jcPEh3P5Bxo3z0ELOIs3IMNyA9UD0qs2bpWoFWG43iMTlEtv3k/s320/vishnu3.jpg 

 விஷ்ணு அஷ்டகம் . MP3

1. விஷ்ணுவஷ்டக மிதம் புண்யம் பிரா த:காலே படேன்நர:
கோடிஜன்ம க்ருதம் பாபம் தத்க்ஷணேன வினஸ்யதி

2. நமஸ்தே புருஷஸ்ரேஷ்ட ஸ்தித்யுத்பத்ய ப்யயேஸ்வர
பக்தானாம் ந : ப்ரபன்னானாம் முக்யோஹ்யாத்மா கதிர்விபோ

3. ஸர்வேலீலாவதாராஸ்தே பூதானாம் பூதிஹேதஸ:
ஜ்ஞா துமிச்சாம்யதோரூபம் யதர்த்தமம் பவதாத்ருதம்

4. பிரஹ்மன் நபாரே ஸம்ஸாரே ராகாதி வ்யாப்த மானஸ:
ஸப்தாதி லுப்த்த புருஷ: கிம்குர் வன்னாவஸீததி

5. ஸ்வே மஹிம்நி ஸ்த்திதம் தேவம் அப்ரமேய மஜம் விபும்
ஸோக மோஹ விநிர்முக்தம் விஷ்ணும் தியான்னஸீததி

6. விப்ரமாண திகம் பிரஹ்ம வேதாந்தேஷு ப்ரகாஸிதம்
ஆத்யம் புருஷமீ ஸானம் விஷ்ணும் தியான்னஸீததி

7. அம்ருதம் ஸாதனம் ஸாத்யம் யம்பஸ்யந்தி மநீஷண
ஜ்ஞேயாக்யம் பரமாத்மானம் விஷ்ணும் தியாயன்னஸீததி

8. அஸாநாத்யைரஸம் ஸ்ப்ருஷ்டம் ஸேவிதம் யோகி பிஸ்ஸதா
ஸர்வதோஷ விநிர்முக்தம் விஷ்ணும் தியாயன்னஸீததி

9. க்ஷராக்ஷர விநிர்முக்தம் ஜன்ம மிருத்யு விவர்ஜிதம்
அபயம் ஸத்யஸங்கல்பம் விஷ்ணும் தியாயன்னஸீததி

10. அதுல்ய ஸஹதர்மாணாம் வ்யோமதேஹம ஸனாதனம்
தர்மா தர்ம விநிர்முக்தம் விஷ்ணும் தியாயன்னஸீததி

11. வியாஸாத்யைர் முநிபி: சித்தை : தியானயோக பராயணை
அர்சிதம் பாவ குஸுமை: விஷ்ணும் தியாயன்னஸீததி

12. விஷ்ண்வஷ்டகமிதம் புண்யம் யோகிநாம் ப்ரீதிவர்த்தனம்
ய: படேத் ப்ராதருத்தாய ஸபவேத் வைஷ்ணவோ நர:

13. அஸ்வமேத ஸஹஸ்ரஸ்ய பலம் ப்ராப்னோதி மானவ:
ஸர்வகாமம் லபேத்யஸ்ய படநான் நாத்ரஸம்ஸய:

14. ஏதத் புண்யம் பாபஹரம் தன்யம் துர்ஸ்வப்ன நாஸனம்
படதாம் ஸ்ருண்வதாம் சைவவிஷ்ணோர் மஹாத்மியமுத்தமம்

15. அபுத்ரோ லபதே புத்ரம் தனார்த்தீ லபதே தனம்
வித்யார்த்தீ லபதே வித்யாம் மோக்ஷõர்த்தீ லபதே ஸகீம்

16. ஆபதோ ஹரதே நித்யம் விஷ்ணு ஸ்தோத்ராத்த ஸம்பதா
யஸ்த்விதம் படதி ஸ்தோத்ரம் விஷ்ணுலோகம் ஸ கச்சதி

Tuesday 17 July 2012

ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அஷ்டகம்.MP3

 http://files.namakkaltemple.webnode.com/200000006-57a49589f5/namakkal-narasimhar.jpg



ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அஷ்டகம்.MP3



ஸ்ரீ வாதகேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளியது

1. ஸ்ரீமதகலங்க பரிபூர்ண சசிகோடி
ஸ்ரீதர மநோஹர ஸடாபடல காந்த
பாலய க்ருபாலய பவாம்புதி நிமக்னம்
தைத்யவர கால நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

2. பாத கமலாவனத பாதகி ஜனானாம்
பாதக தவானல பதத்ரிவர கேதோ
பாவன பராயண பவார்த்திஹரயா மாம்
பாஹி க்ருயைவ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

3. துங்க நக பங்க்தி தளிதாஸுர வராஸ்ருக்
பங்க நவகுங்கும விபங்கில மஹோர
பண்டிதநிதான கமலாலய நமஸ்தே
பங்கஜ நிஷண்ண நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

4. மௌளிஷு விபூஷண மிவாமர வராணாம்
யோகி ஹ்ருதயேஷுச சிரஸ்ஸுநிகமாநாம்
ராஜதரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்தி நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

5. வாரிஜ விசோசன மதந்திம தசாயாம்
க்லேச விவசீ க்ருத ஸமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா ஸஹசரண்ய விஹகானாம்
நாத மதிருஹ்ய நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

6. ஹாடக கிரீட வரஹார வனமாலா
தார ரசனா மகரகுண்டல மணீந்த்ரை
பூஷிதமசேஷ நிலயம் தவவபுர் மே
சேதஸி சகாஸ்து நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

7. இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லஸத்வர ரதாங்க
ஸுந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்தித ஸுரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

8. மாதவ முகுந்த மதுஸூதன முராரே
வாமன ந்ருஸிம்ஹ சரணம் பவ நதாநாம்
காமத க்ருணின் நிகிலகாரண நயேயம்
கால மமரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

9. அஷ்டகமிதம் ஸகலபாதக பயக்னம்
காமத மசேஷ துரிதாமய ரிபுக்னம்
ய: படதி ஸந்தத மசேஷ நிலயம் தே
கச்சதிபதம் ஸ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!



http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/god_view.png
MP3,அஷ்டகம்,ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ,ஆஞ்சநேயர், மந்திரம்,நாமகிரி தாயார்,நாமகிரி,தாயார்,மகாலட்சுமி,மந்திரம்,ஸ்லோகம்

 

Monday 16 July 2012

லட்சுமி நரசிம்மர் துதி


மார்க்கண்டேய உவாச

1. ஏவம் யுத்த மபூத்கோரம் ரௌத்ரம் தைத்ய பலைஸ்ஸஹ
ந்ருஸிம்ஹஸ்யாங்க ஸம்பூதைர் நாரஸிம்ஹை ரநேகச

2. தைத்யா தோட்யோஹதா: ஸ்ததரகேசித பீதா: பலாயிதா
தம் த்ருஷ்ட்வாரிவதம் க்ருத்தோ ஹிரண்ய கஸியு ஸ்வயம்

3. பூதபூர்வைர ம்ருத்யுர்மே இதிப்ரஹ்ம வரோத்தத
வவர்ஷ ஸாவர்ஷேண நராஸிம்ஹம் பருசம்பலீ

4. த்வந்த யுத்தமபூதுக்ரம் திவ்ய வர்ஷ ஸஹஸ்ரகம்
தைத்யேந்த்ர ஸாஹஸம் த்ருஷ்ட்வா தேவா இத்ர புரோகமா

5. ச்ரேய கஸ்ய பவேத்ர இசி சிந்தா பராபவந
தாதாக்ருத்தோ ந்ருஸிம்ஹா தைத்யேந்த்ர ம்ரஹ்தாந்யுதி

6. விஷ்ணுசக்ரம் மஹாசக்ரம் காலசக்ரஞ்ச வைஷ்ணவம்
ரௌத்ரம் பாசுபதம் ப்ராஹ்மம் கௌபேரம் குலிஸாநிலம்

7. ஆக்னேயம் வாருணம் ஸெளம்யம் மோஹனம் சைவபார்வதம்
பார்க்கவாதி பஹுன்யஸ்த்ராண்ய பக்ஷய தகோபன

8. தத: கட்கதரம் தைத்யம் ஜக்ராஹ நரகேஸரீ
ஸந்த்யாகாலே ஸபரத்வாரே ஸ்வாங்கே நிக்ஷ்ப்ய பைரவம்

9. ஹிரண்யகசி போர்வ÷க்ஷõ விதார்யாதீவ ரோஷீத
உத்ருத்யசாஸ்த்ர மால்யாணி நகைர்வஜ்ர ஸமப்ரபை

10. மேனே க்ருதார்த்த மாத்மானம் ஸர்வதா: பர்யவையக்ஷத
தர்பிதா தேவதாஸ் ஸர்வா: புஷ்பவ்ருஷ்டி மவாகிரான்

11. தேவதுந்துபயோநேது: திசஸ்ய விமலாபன்
ந்ருஸிம்ஹ மதிதேஜஸ்கம் விகீர்ன வதனம் ப்ருசம்

12. லேலிஹானம்ச கர்ஜந்தம் காலநல ஸமப்ரபம்
அதிரௌத்ரம் மஹாகாயம் மஹாத்ம்ஷ்ட்ரம் மஹாபுஜம்

13. மஹாஜிஹ்வம் மஹாரூபம் த்ருஷ்ட்வா ஸம்÷க்ஷõபிதம் ஜகத்
ஸர்வதேவ கணைஸ்ஸார்த்தம் தத்ராகத்ட் பிதாமஹ

14. ஆகந்து கைபூர்த பூர்வை: வர்த்தமானை ரனுத்தமை
குணைர்நாம ஸஹஸ்ரேண துஷ்டாவ ச்ருதிஸம்மதை

ஓம் நம ஸ்ரீமத் திவ்யலட்சுமி ந்ருஸிம்ஹாயேதி ஜ்ஞான முத்ராம்விதாய ஓம்-யம்யம். ஓம்-வம்-வம், ஓம்-ரம்-ரம், ஓம்-லம்-லம். இதி பீஜானி ஜபித்வா.

Sunday 15 July 2012

ஸ்ரீ ராமர் அஷ்டகம் .MP3

 http://1.bp.blogspot.com/-VryISljUiNs/TvnZtA8b-OI/AAAAAAAAmGg/U88NXfc-V-0/s1600/RLS+CHARLSTON+STH+CAROLINA+B.jpg


ஸ்ரீ ராமர் அஷ்டகம்  .MP3 



வேதவியாசர் அருளியது

பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்


பொருள்: அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்
ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்


பொருள் : அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன்.

நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்


பொருள்: ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்


பொருள்: உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.

நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்
சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்

பொருள்: பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்
குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்


பொருள்: சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுகிறேன்.

மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை
பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்


பொருள்: மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்பவராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிக்கிறேன். (பரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மகாவாக்கியத்தை மூன்று முறை சொன்னாலே போதும், அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதற்குச் சமம் என்று கூறியதை நினைவில் கொள்ளலாம்.)

சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்


பொருள்: நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிக்கிறேன்.

ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம் வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய
வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்தி ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம்
ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்


பொருள்: வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!


http://i466.photobucket.com/albums/rr23/seshadritholappa/ramar.jpg  http://3.bp.blogspot.com/-ItljBkyJTQI/T6ZCy7E0KiI/AAAAAAAAoik/cq8VhdEYCkM/s1600/ANJU+DHYANAM.jpg

ஸ்ரீ ராமர் , ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜாதகம் 






"ஸ்ரீ ராமர் ஜாதகத்தை பார்த்தல் புண்ணியம் !

ஸ்ரீ ராமர் ஜாதகத்தை வணங்குதல் புண்ணியத்திலும் புண்ணியம் !!  "



ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் , பாண்டிசேரி

ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் , பாண்டிசேரி 
 
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuhEZZq-n3jhaXoF9P4wrg7ee0_D-9rLkd-a8CvNiF8l0oiS_bbQKte7nYRpzV5CDNvsagJGfO-9w2RfJ1MO0OUF-Nn3TT93tncl7KTIJUWPAPw-0HZFvf0mPPzZRVRoVk4agbjYj7K-E/s320/scan0432.jpg
 
18-ம் நூற்றாண்டின் இறுதியில்,புதுவைக்கு அருகிலுள்ள கடலூரில்-வண்டிப்பாளையம் என்ற ஊரில் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பிறந்தார்.
பிறக்கும் பொழுதே இறையருளுடன் பிறந்ததால் அவர் வீட்டில்
லக்‌ஷ்மி கடாட்சம் இருந்தது.அவரின் வீட்டை “பிள்ளையார் வீடு”
என்றே சொல்வார்கள்.

சிறு வயது முதற்கொண்டே, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ பாடலீஸ்வரரை-வழி பட்டு வந்தார்.இந்த ஆலயத்திற்கு
இவரது தாயார் பூத்தொடுக்கும் பணியை செய்து வந்ததால்,
ஆலயத்தில் மாலையை கொண்டு சேர்க்கும் பணியை சிறுவன்
சித்தானந்தன் செய்து வந்தார்.
அத்துடன் ஆலயப்பணியையும் செய்து வந்தார்.


ஒரு முறை தாயார் கொடுத்தனுப்பிய பூமாலைகளை,ஆலயத்திற்கு
கொண்டு செல்லும்பொழுது,கடுமையான மழையின் காரணத்தினால்
சமயத்தில் கொண்டு போய் சேர்க்கமுடியவில்லை,ஆலயத்தின்
கதவுகள் மூடியபிறகு போய் சேர்ந்ததால், கதவிலேயே கட்டி விட்டு-”இறைவா,உனக்கு தேவையானால் நீயே வந்து எடுத்துக் கொள்"
என்று சொல்லி வந்து விட்டார்.

மறு நாள் கோவில் அர்ச்சகர்,சித்தானந்தனை ஏன் மாலை கொண்டு
வரவில்லை என்று கேட்க,தான் கதவிலே கட்டி விட்டு வந்ததையும்
“இறைவனுக்கு” தேவைப்பட்டால் அவரே எடுத்து கொண்டிருப்பார்
என்றும் சொன்னார்.அர்ச்சகர் சிரித்து விட்டு போய் பார்க்க கோவில்
பூட்டப்பட்டிருந்தது. கதவில் கட்டி விட்டதாக சொன்ன மாலையை காணவில்லை.
உள்ளே சென்று பார்க்க இறைவனை அம்மாலை அலங்கரித்திருக்கக்
கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்.உடனே சித்தானந்தனின் கால்களில்
விழுந்து வணங்கினார்.சித்தானந்தனின் சொற்கள் பலித்தன.

அத்தலத்தில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்மனின் பாற் ஈர்க்கப்பட்டு.
விடாது தொடர்ந்து எய்தி வழிபட்டார்.எவரொருவர் அனைத்தையும்
இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு-”அவனே கதி”- என்று அவன்
பாதங்களில் விழுந்து கிடக்கின்றாரோ , அவரிடமே இறைவன்
ஒளி விட்டு பிரகாசிப்பான் .இறைவன் நம்முள் பிரகாசிக்கத்
தொடங்கினால் தான் இறையுணர்வு கிட்டும்.

எய்தி வழிபடில் எய்தாதன இல்லை
எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்
எய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே
-திருமூலர்

எய்தி வழிபட்டார்.ஸ்ரீ பெரியநாயகி அம்மையின் திருவருள்
பெற்றார்- கடும் தவ பயனினால் .அட்டமா சித்திகளையும் பெற்றார்.
அவர் கைப்பட்டதுமே தீராத வியாதிகளும் தீர்ந்தன. அம்மையின்
அருளால் அவரின் புகழ் பல இடங்களிலும் பரவியது.

ஒரு சமயம்,புதுவையில்-முத்தியால்பேட்டை என்னும் பகுதியில்
வாழ்ந்து வந்தமுத்து குமாரசாமி பிள்ளை என்பவரின் மனைவி
அன்னம்மாளுக்கு தீராத வியாதி வந்தது.சிறந்த மருத்துவர்களை
கொண்டு சிகிச்சையளித்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை.
மிகுந்த துயரத்தில் வாடிய அக்குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல
வந்த ஒரு பெரியவர்-கடலூரிலுள்ள ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளின்
அருளைப் பற்றி தெரிவித்து, உடனே சென்று பார்க்க சொன்னார்.
அடியார்க்கு தொண்டு செய்வதை தன் பாக்கியமாக கருதும்
முத்துக்குமார சாமி பிள்ளையவர்களும் உடனே கடலூர்
பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சுவாமிகளை கண்டு
காலில் விழுந்து தன் கருத்தை தெரிவித்தார். சுவாமிகளும்
புதுவைக்கு வரச் சம்மதித்தார்.

சுவாமிகள் புதுவையை நெருங்கிக் கொண்டிருக்க
அன்னம்மாளின் நோயும் விலகிக் கொண்டிருந்தது.
வீட்டிற்கு வந்ததும் நோயும் பறந்தது.
தம்பதிகள் சுவாமிகளின் திருவருளை உணர்ந்து,தங்கள்
இல்லத்திலேயே அவரை தங்கும் படி வேண்டிக்கொண்டனர்.
சுவாமிகளும் இசைந்தார்.

பிள்ளையவர்களின் வீட்டிலேயே தங்கி தம் ஆன்ம ஞானத்தை
மேற்கொண்டார்.சுவாமிகளின் அருளை கேள்விப்பட்டு அப்பகுதியில்
உள்ள மக்கள் திரண்டு வந்து ஆசி பெற்று சென்றனர்.

ஒரு நாள் பிள்ளையவர்களுடன்,சுவாமிகள் கருவடிகுப்பம் வழியாக
சென்று கொண்டிருந்த பொழுது-பிள்ளை தன் தோட்டத்தை
காண்பித்தார். சுவாமிகள் உள்ளே சென்று பார்க்கலாம் என்று
சொல்லி விட்டு உள்ளே நடக்க ஆரம்பித்தார்.
ஓரிடத்தில் நின்று உற்று பார்த்து விட்டு,
“இது இங்கே தான் இருக்கப் போகிறது-இது இங்கே தான் இருக்கப்
போகிறது” என்று தம் உடலையும் அந்த இடத்தையும் மூன்று முறை
தம் விரலால் சுட்டி காண்பித்தார்.மற்றொரு இடத்தை காண்பித்து
பிள்ளையின் மனைவி சமாதியும் இங்கு தான் என்றார்.
முத்தியால்பேட்டையில் வசித்து வந்த முத்தைய முதலியார்,
சொக்கலிங்க முதலியார் போன்றோர்-சுவாமிகள் மேல் தீராத
பக்தியுடன் பூஜித்து வந்தனர்.சித்தரை பூஜித்தால்
சிவனையே பூஜித்தது போல் அல்லவா?
சுவாமிகளும் அவர்தம் இல்லங்களுக்கு
சென்று ஆசி வழங்குவார்.
ஒரு முறை முத்தைய முதலியாரின் மனைவி,பிரசவ வலியால்
துடித்துக் கொண்டிருப்பதை கண்டு-பொறுக்க மாட்டாமல்,
முதலியார், சுவாமிகளை தேடி ஓடினார்.சுவாமிகளிடம்
முறையிடும் முன்பே,முதலியாரின் உணர்வை
புரிந்து கொண்ட சுவாமிகள்,”கவலை படாதே ,உனக்கு ஆனந்தம்
தரும் ஆனந்தன் பிறந்து விட்டான்,சென்று பார்” என்று
ஆசிர்வதித்து அனுப்பினார்.
எங்கு, எது நடக்கிறது என்பதை ஞானக் கண்ணால் காணும்
பேராற்றல் படைத்தவர் சுவாமிகள்.
சுவாமிகள் சொன்னதை கேட்டு சந்தோஷம் கொண்ட
முதலியார் வீட்டிற்கு சென்று பார்த்தார்.அங்கு தாயும் சேயும்
நலமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்.
ஆனந்தக்கண்ணீர் மல்கினார்.சுவாமிகளின் ஞான வாக்கு
அப்படியே நடந்ததை கண்டு பூரிப்படைந்தார். சுவாமிகளின்
திருவாக்கு படியே தம் மகனுக்கு “ஆனந்தன்” என்று பெயரிட்டார்.
ஒரு நாள் முத்துசாமி என்னும் பக்தர் இல்லத்திற்கு,நெல்லித்தோப்பு
வழியாக சுவாமிகள் சென்று கொண்டிருந்த பொழுது,
குடிகாரன் ஒருவன் சுவாமியை கிண்டல் செய்து வம்புக்கு
இழுத்தான். சுவாமியையும் சாராயம் குடிக்கச் சொல்லி
வற்புறுத்தினான். சுவாமிகள் அதனைக் கண்டு நடுங்கவில்லை.


ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனும் அங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே
--திருமூலர்


சுவாமிகள் சாராயம் பருகினார்.நிறைய பருகினார்.
பருக பருக குடிகாரனுக்கு போதை ஏறியது,
மேலும் மேலும் சுவாமிகள் சாராயம் பருக,குடிகாரன்
போதை தலைகேறி மயங்கி கீழே விழுந்தான்.

சுவாமிகள் சிரித்துக்கொண்டே சென்று விட்டார்.
பலமணியாகியும் குடிகாரன் எழுந்திருக்கவில்லை.
உறவினர்கள் கலங்கினர்,கண்ணீர் விட்டனர்,கதறி அழுதனர்.
பின் செய்வதறிந்து சுவாமிகளை கண்டு குடிகாரனை
மன்னிக்கும் படி மன்றாடினர். கருணையே உருவான சுவாமிகள்
அங்கு சென்று அவனை மன்னித்தார்.
மயக்கம் தெளிந்து எழுந்த குடிகாரன் தன் தவறை உணர்ந்து
சுவாமிகளின் காலில் விழுந்து,அழுது மன்னிப்பு கேட்டான்.
சுவாமிகளும் அவனுக்கு ஆசி வழங்கினார்.
ஆண்டுகள் பல கடந்தன. சுவாமிகளின் ஆத்மீக சாதனை
முடியும் நேரம் வந்து விட்டதை உணர்ந்தார். ஸ்ரீ பாடலீஸ்வர
பெருமானின் திருக்கட்டளைக்காக காத்திருந்தார்.

திடீரென்று ஒரு நாள் முத்துக்குமாரசாமி பிள்ளையை அழைத்து
“ஏவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 28 ம் தேதி வெள்ளிக்கிழமை
அன்று எனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது-இதை எல்லோரும்
அறியும்படி செய் “ என்றார்.இந்நிகழ்ச்சி சித்தர் சமாதி அடைய
பத்து நாட்களுக்கு முன் நடந்தது.
நாட்கள் நகர்ந்தன.தாம் உபயோகித்த பாத குறடையும்
கைத்தடியையும் சொக்கலிங்க பிள்ளையிடம் கொடுத்து விட்டார்.
அன்று பத்தாம் நாள்.சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.
கற்பூர ஆராதனை நடந்தது. கற்பூர தீபம் ஜெக ஜோதியாக
உயர்ந்து உயர்ந்து எரிந்தது. தீப ஒளியில் சுவாமிகளை
அந்த சிவனாகவே கண்டனர்-பக்தர்கள்.


எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குந் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்
தங்குஞ் சிவனருள் தன் விளையாட்டத்தே
-திருமந்திரம்


ஓம் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளை  ஒரு பெரிய மகான்,ஆத்ம ஞானி
என்ற சிந்தனையை மறந்து-பிரபஞ்சத்தை படைத்த
பரம்பொருளாகவே நினைவில் கொண்டு வணங்கினார்கள்.
கண்ணீர் மல்க வணங்கினார்கள். பத்மாசனத்தில் அமர்ந்த
சுவாமிகள் அப்படியே உள்ளாழ்ந்தார்.
பிராணன் பிரம்மக் கூட்டை விட்டு விலகியது. ஆத்ம சாதகர்கள்
சுவாமிகளின் பிரம்மத்தை தரிசித்தார்கள்.தங்களையே
மெய்மறந்தார்கள். கருவடிகுப்பத்தில்-முத்துகுமாரசாமி
தோட்டத்தில் -சுவாமிகள் சுட்டி காட்டிய இடத்தில்-சமாதி
கட்டப்பட்டு-சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தற்பொழுது சுவாமிகளின் சமாதி ஒரு சிறந்த சிவாலயமாக
காட்சியளிக்கிறது.

ஆத்ம சாதகர்கள் தியானத்திற்காகவும்,பக்தர்கள் மன அமைதி
வேண்டியும் இங்கு வருகின்றனர்.நெறியான வேண்டுகோள்கள்
நிறைவேறுவதை எல்லோரும் கண் கூடாக காண்கிறார்கள்.
 
http://lh3.ggpht.com/_vnD4P42nTlU/S0TLqDQGKCI/AAAAAAAAALI/jvZA7LqbQt8/s512/IMGA0035.JPG

மகாகவி பாரதியார், ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பற்றி சிறப்பாக
பாடியுள்ள பாடல் இதோ ;

சித்தானந்தசாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளியுண்டாம்; பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச்சுடராம் ;பெண்ணே

உள்ளத்தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்டவருஞ் சுடராம்; பெண்ணே
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்பட
காட்டவருஞ் சுடராம் ; பெண்ணே

தோன்று முயிர்கள் அனைத்தும் நன்றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்; பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்; பெண்ணே

பட்டினந்தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிசுடராம்; பெண்ணே
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காணவொளிர் சுடராம்; பெண்ணே




அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், காஞ்சிபுரம்,

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், பஸ்நிலையம் அருகில், காஞ்சிபுரம்


http://img1.dinamalar.com/Kovilimages/T_500_1410.jpg
 

சித்ரகுப்தர் காயத்ரி 

ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் பிரசோதயாத்



சித்ரகுப்த பூஜையை முறையாகச் செய்தால் உயர்நிலை அடையலாம் என்பது திண்ணம். கேது பகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். ஆகையால் சித்ரகுப்தரை வணங்குவதால் கேதுவினால் துன்பம் உண்டாகாது. வளமான வாழ்வு, மேன்மை, ஞானம், மோட்சம் அனைத்தும் கிட்டும்.

சித்ரகுப்தரைக் போற்றும் " ஓம் யமாய தர்மராஜாய ஸ்ரீசித்ரகுப்தாய வை நமஹ" மந்திரத்தையும் எழுதி, தங்கள் பெயர், முகவரி, அன்றைய தேதி மற்றும் முழு வரவு செலவு கணக்கை எழுதி, அதை மடித்து படத்தின்முன் வைத்து பூஜிப்பார்கள். அடுத்துவரும் ஆண்டில் எதிர்பார்க்கும் வரவு செலவையும் உத்தேசமாகக் குறித்து, அது நிறைவேற சித்ரகுப்தரின் ஆசியை வேண்டுவார்கள்.



சித்ரகுப்தருக்கு  நேர்த்திகடனாக அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

முன்னொரு காலத்தில், சௌதாஸ் என்ற மன்னன் தற்போது சௌராஷ்டிரம் எனப்படும் பிரதேசத்தை ஆண்டு வந்தான். கொடுங்கோலனாகவும், அசுரர்களை விடவும் மோசமாக ஆட்சி செய்து மக்களைத் துன்புறுத்தி வந்தான். தனது ஆணையில்லாமல் ஒரு செயலும் நடக்கவிட மாட்டான். தன்னை ராஜாதி ராஜன், பேரரசன் எனக் கூறிக்கொண்டான். ஒரு நாள், காட்டில் அவன் வேட்டையாடச் சென்ற போது தன் பரிவாரங்களை விட்டு வெகு தூரம் வழிதவறிச் சென்றுவிட்டான். அலைந்து திரிந்த சமயத்தில் அவன் செவியில்,

ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் பிரசோதயாத்

என்று எவரோ சித்ரகுப்த கயாத்ரியை மந்திர உச்சாடனம் செய்யும் ஒலி விழுந்தது. சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றான். அங்கு சீடர்கள் புடைசூழ, தவசிகளும் முனிவர்களும் வேள்வி செய்வதைப் பார்த்து வெகுண்டான். என் ஆணையில்லாமல் இப்படியொரு யாகமா செய்கிறீர்கள்? நிறுத்தாவிட்டால், அனைவரையும் கொன்றுவிடுவேன் ! என்று கத்தினான்.

துறவிகள் அவனைச் சட்டை செய்யவில்லை. அதனால் மேலும் வெகுண்டு, வேள்வி நடத்தும் முதியவரை அணுகித் தன் உடைவாளால் அவரைக் கொல்ல வந்தான். அதைக் கண்ட ஒரு இளம் சீடன், அப்பனே ! நீ யார்? எதற்காக இடையூறு செய்கிறாய்? என்று வினவ, சௌதாஸ், நான் ராஜாதி ராஜன் சௌதாஸ். நீங்கள் எல்லாம் யார்? என்று கோபமாகக் கேட்டான்.

அந்தச் சீடனோ புன்முறுவல் பூத்து, சௌதாஸ் ! ராஜாதிராஜன் என்பவர் சித்ரகுப்தர் ஒருவர்தான் ! அந்தப் பட்டம் பெற வேறு எவருக்கும் தகுதியில்லை. நாங்கள் சித்ரகுப்த வம்சாவளியினரான காயஸ்தர்கள். எங்கள் குலதெய்வம் சித்ரகுப்தருக்கு பூஜை செய்கிறோம். தாங்களும் கலந்துகொண்டு புண்ணியம் பெறுங்கள். செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இந்த பூஜை செய்து, நரகத்திலிருந்து விடுபட்டு சித்ரகுப்தரின் அருள்பெற முன் வாருங்கள் என்று பூஜையின் மகிமையை விளக்கினான். அதைச் செவிமடுத்த சௌதாஸ், தான் செய்த பாவச் செயல்களுக்கு வருந்தி மனம் மாறினான். வேள்வியில் கலந்துகொண்டவன், பின்னால் ஆண்டுதோறும் சித்ரகுப்த பூஜையை முறையாக நடத்தி ஆராதித்து வந்தான்.

அந்திமக் காலத்தில் உயிர்பிரிந்த அவனது ஆத்மாவை, யமதூதர்கள் யமலோகத்துக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கு சித்ரகுப்தர் யமனிடம், சௌதாஸின் கர்மவினைகளைத் தன் பதிவேட்டிலிருந்து படித்தார். பிரபு! இவன் செய்த பாவச் செயல்கள் எண்ணில் அடங்காது. அதர்மமே மேலோங்கி நிற்கிறது. நரகத்தில்தான் இவன் உழல வேண்டும். ஆனால், வாழ்வின் பின்னாளில் மனம் திருந்தி, நம் இருவரையும் முறையாக பூஜித்துள்ளான். அதனால் இவனுக்கு, சொர்க்கலோகத்துப் பலனை அனுபவிக்க அனுமதிக்கலாம். பிரபு ! என்று கூற, யமனும் தலையசைத்து சம்மதித்தான். சித்ரகுப்தரின் வாக்குக்கு மறுப்பு ஏது! சௌதாஸ் சொர்க்கலோகவாசியானான்.

பார்வதி பரமேஸ்வரர் அருளால் அவதரித்தவர். பிள்ளையில்லா குறை நீங்க, இந்திரன் - இந்திராணிக்கு தெய்வப் பசு காமதேனு மூலம் அவதரித்தவர் என்று இவரது பிறப்பு பற்றிச் சொல்வதுண்டு. யமலோகத்தில் நிலவிய நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்ய, பிரம்மன் தன் மனதுள் ரகசியமாக உருவகப்படுத்திய உருவத்தை இருத்தி, 11,000 ஆண்டுகள் ஈசனை நோக்கித் தவமியற்றினார். முடிவில், தன் மனதில் இருந்தவரே தன் முன், கையில் எழுத்தாணி ஓலைச்சுவடியுடன், இடையில் தொங்கும் உடைவாளுடன் தெய்வீகக் களை சொட்ட தோன்ற, தவத்தின் பலனை உணர்ந்தவராக அகமகிழ்ந்தார். ரகசியமாக என் உடம்பிலிருந்து (காயம்) தோன்றியதால், சித்ரகுப்தர் என அழைக்கப்படுவாய். உனது சந்ததியினர் காயஸ்தா என அறியப்படுவர் என்று அருளினார் பிரம்மன். தமிழகத்தில் இவர்கள் கருணீகர் என அழைக்கப்படுகிறார்கள். சித்ரகுப்தர் இவர்களது முழுமுதற் கடவுளாக வணங்கப்படுகிறார்.

பின்னர் நான்முகனின் ஆணைப்படி சித்ரகுப்தர் காளிதேவியை உபாசித்து, அவளது கருணையால் எண், எழுத்து இரண்டிலும் புலமைபெற்ற உலகின் முதல் மாணாக்கராக ஆனார். பிறகு, அவந்திகாபுரி (உஜ்ஜயினி) சென்று மகா காலேஸ்வரரின் அருளால் கணக்கு வழக்குகளைப் பேரேட்டில் பதியும் திறமையைப் பெற்று, ஐப்பசி மாத யம துவிதியை நாளில் யமதர்மராஜனின் கணக்கராகப் பதவி ஏற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

 தமிழகத்தில் சித்ரகுப்தருக்கென ஒரு சில கோயில்களே உள்ளன. அதில் முதன்மையானது இக்கோயில்.

http://img1.dinamalar.com/kovilimages/news/TN_141457000000.jpg

உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர். பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.
உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்! பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு! ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை? இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.
தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்! சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது. தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.